உங்க பேருல எத்தனை சிம்கார்டுகள் இருக்கு..? தட்டித் தூக்கத் தயாராகும் போலீஸ்.. புதிய சட்டம் அமல்

By John A

Published:

தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் இன்று கையடக்க செல்போனுக்குள் உலகமே சுருங்கி விட்டது. எந்த அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளதோ அதனைப் பயன்படுத்தி சைபர் கிரைம் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. தற்போது சிம் கார்டு இல்லாமலே இ-சிம் -ல் செயல்படும் அளவிற்கு மொபைல்களும் சந்தைக்கு வந்துவிட்டது.

மொபைல் எண்ணைச் சொன்னாலே போதும் ஒருவரின் மொத்த ஜாதகத்தையும் எடுத்துவிடும் அளவிற்கு அனைவரது மொபைல் எண்ணிலும் பல்வேறு வகையான அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பல தனிப்பட்ட விபரங்களைப் பதிவேற்றி வைத்திருக்கின்றன.

இதனை மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகம் நிர்வகித்து வருகிறது. இந்நிலையில் ஒருவரின் தனிப்பட்ட பெயரில் சில சிம்கார்டுகளை வைத்துக்கொள்ள மட்டுமே சட்டம் உள்ளது. ஆனால் சட்ட விரோதமாக ஒருவரின் பெயரில் 10 சிம்கார்டுகளை வைத்திருந்தால் இனி சிறைதான் என்ற வகையில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஒருவரின் பெயரில் பல சிம்கார்டுகள் வாங்கும்போது அதனைத் தவறாகப் பயன்படுத்த நிறைய வாய்புள்ளது. எனவே இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் ஒருவரின் பெயரில் 10சிம்கார்டுகள் இருந்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கும் புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

PM ஜீவன் ஜோதி பீமா யோஜனா: இந்த திட்டத்தில் ஆண்டு பிரிமீயமாக ரூ. 436 செலுத்தினால் ரூ. 2 லட்சம் ஆயுள் காப்பீட்டின் பலனைப் பெறலாம்…

இந்தக் குற்றம் முதன் முறையாகக் கண்டறியப்பட்டால் 50,000 அபராதமும், அதன்பிறகும் தொடர்ந்தால் ரூ.2 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.மேலும் வேறொருவரின் அடையாள அட்டையைப் பயன்படுத்தி சிம்கார்டு வாங்கினால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50 இலட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.

மேலும் பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. சட்ட விரோதமாக வயர்லெஸ் கருவிகள், தொலை தொடர்பை தடுக்கக் கூடிய சாதனங்கள் வைத்திருந்தாலும் கடுமையான தண்டனை கிடைக்க இச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் தீவிரவாத அச்சம் உள்ள ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் 6 சிம்கார்டுகளுக்கு மேல் வைத்திருந்தாலே இச்சட்டம் பாயும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி ஒருவரது பெயரில் எண்ணற்ற சிம்கார்டுகள் அல்லது பயன்படுத்தப்படாத எண்கள் இருந்தால் உடனே அருகிலுள்ள வாடிக்கையாளர் சேவை மையத்திற்குச் சென்று அந்த எண்ணை செல்லாததாக்க செய்வது நலம்.