உத்தரபிரதேசம் மாநிலத்தில் பெற்ற அம்மாவை தீ வைத்து கொளுத்திய மகன் அவர் எரிவதை வேடிக்கை பார்த்ததோடு வீடியோ எடுத்ததாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அலிகர் என்ற பகுதியில் நிலப் பிரச்சனைக்காக காவல் நிலையத்தில் இரு தரப்பினர் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என தெரிகிறது.
இந்த நிலையில் புகார் கொடுத்து இருந்த ஹேமலதா என்பவர் போலீஸ் நிலையத்திலிருந்து வெளியே வந்த போது அவருடைய மகன் திடீரென தாயார் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்தினார். அப்போது ஹேமலதா தீயில் எரிந்து கதறிய போது அதை தனது மொபைல் போனில் அவருடைய மகன் வீடியோ எடுத்தார்.
கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்களுக்கு மேல் தீயில் கருகிய அந்த பெண் உடல் முழுவதும் தீக்காயம் அடைந்ததை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் அவர் உயிரிழந்தார்.
இந்த விவகாரத்தில் ஹேமலதாவின் மகன் கவுரவ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். போலீஸ் நிலையம் அருகிலேயே பெற்ற தாயை பெட்ரோல் ஊற்றி மகனே கொளுத்திய சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. சொத்து பிரச்சனை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஹேமலதா வந்திருந்த நிலையில் அவரை அவரது மகனே பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் ஹேமலதாவின் மகன் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இனி அவர் சாகும் வரை ஜெயிலில் தான் இருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
