மகளிருக்கு இலவச பேருந்து திட்டத்தால் ரூ.295 கோடி நஷ்டம்.. உயர்கிறது பஸ் கட்டணம்..!

By Bala Siva

Published:

தமிழகத்தைப் போலவே கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த அறிவிப்பு காரணமாக 295 கோடி ரூபாய் கர்நாடக மாநில போக்குவரத்து கழகத்தின் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து 20% பேருந்து கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் புறப்படுகிறது.

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் பெண்களுக்கு இலவச பேருந்து என்ற அறிவிப்பு வெளியானதை அடுத்து இந்த திட்டத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இதே போல் கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி பொறுப்பை ஏற்ற உடன் பெண்களுக்கு இலவச பேருந்து என்ற அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பு காரணமாக தற்போது கர்நாடக அரசின் போக்குவரத்து துறை பெரும் நஷ்டத்தில் இருப்பதாகவும் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் ரூ.295 கோடி நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

எனவே பேருந்து கட்டணத்தை 20% உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் முதல்வரின் ஒப்புதலுக்கு பிறகு பேருந்து கட்டணம் உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தின் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளாக கர்நாடக மாநிலத்தில் பேருந்து கட்டணம் உயர்த்த வில்லை என்றும், இதனால் ஊழியர்களுக்கு சம்பளமும் உயர்த்தவில்லை என்றும் அடிப்படை செலவுக்கு கூட வருமானம் போதுமானதாக இல்லை என்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே கர்நாடக மாநிலத்தில் எப்போது வேண்டுமானாலும் பேருந்து கட்டண உயர்வு குறித்த அறிவிப்பு வெளியேறும் என்று கூறப்படுவதால் மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் பேருந்து கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை என்றும், பேருந்து கட்டணம் உயர்வதாக வெளிவந்து கொண்டிருக்கும் தகவல் பொய்யானது என்றும் கர்நாடக காங்கிரஸ் கூறியுள்ளது.