வாடகை வீடுகளுக்கு சொத்து வரி 100% உயர்வு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

By Bala Siva

Published:

 

பெங்களூரில் வாடகை வீடுகளுக்கு 100% சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சமீபத்தில் பெங்களூரில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ள நிலையில் தற்போது வாடகை வீடுகளுக்கு 100% சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாக பெங்களூரு மாநகராட்சி தெரிவித்துள்ளது . அது மட்டும் இன்றி ஹோட்டல்கள், மால்களுக்கு இரண்டு முதல் ஐந்து மடங்கு சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இதன் காரணமாக பில்டிங் உரிமையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வாடகை வீடுகளுக்கு சொத்து வரி 100% உயர்த்தப்பட்டுள்ளதால் வாடகைக்கு குடியிருக்கும் மக்கள் மீது தான் இந்த சுமை ஏற்றப்படும் என்றும் இதனால் பெங்களூரில் வீட்டின்  வாடகை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே பெங்களூரில் மற்ற தென்னிந்திய நகரங்களை விட மிக அதிகமாக வாடகை பெறப்பட்டு வரும் நிலையில் தற்போது சொத்துவரி உயர்த்தப்பட்டதால் இன்னும் உயரும் என்று கூறப்படுகிறது.

அதே போல் ஹோட்டல்கள் மால்களுக்கும் சொத்து வரி பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் அங்கு விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாடகை வீடுகளுக்கு 100% சொத்து வரி உயர்த்தப்பட்டதற்கு பொதுமக்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.