கைதாகி போலீஸ் வாகனத்தில் சென்றவர் பீர் குடித்த வீடியோ.. மதுவிலக்கு உள்ள மாநிலத்தில் இப்படியா?

By Bala Siva

Published:

காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு போலீஸ் வாகனத்தில் அழைத்து செல்லப்பட்ட இளைஞர் ஒருவர் வாகனத்தில் உள்ளே பீர் குடித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த சம்பவம் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ள குஜராத் மாநிலத்தில் நடந்து உள்ள நிலையில் பல கேள்விகள் எழுந்துள்ளன.

குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத்தில் இளைஞர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு போலீஸ் வேனில் ஏற்றப்பட்டார். அவர் அந்த வேனில் சென்று கொண்டிருந்த நிலையில் உள்ளே அவர் பீர் குடித்ததை வெளியே இருந்து பார்த்தது பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

போலீஸ் வாகனத்தில் கைதாகி சென்ற கைதிக்கு எப்படி பீர் பாட்டில் கிடைத்தது? என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர். பொதுமக்கள் இந்த வீடியோவை இணையதளத்தில் வைரல் ஆக்கி பல்வேறு கேள்விகளை கேட்டு வருகின்றனர்.

குஜராத் மாநிலத்தில் முழுமையான மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மதுவை விற்றாலோ, வாங்கி குடித்தாலோ குற்றம் என சட்டம் சொல்கிறது. ஆனால் போலீஸ் வாகனத்தில் கைது செய்யப்பட்ட ஒருவரே பீர் குடித்துக் கொண்டு செல்வதை பார்க்கும் போது மதுவிலக்கு எந்த அளவுக்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது என்பது புரிந்து கொள்ள முடிகிறது என பொதுமக்கள் இந்த வீடியோவுக்கு கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

இது குறித்து விசாரணைக்கு குஜராத் மாநில காவல் துறை உத்தரவிட்டு உள்ள நிலையில் அந்த கைதிக்கு பீர் பாட்டிலை கொடுத்தது யார் என்பது குறித்து விசாரணை முடிவில் தான் தெரிய வரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குஜராத் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.