IPS transfer| தாம்பரம் முதல் திருப்பூர் வரை 18 ஐபிஎஸ் அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்.. தமிழக அரசு அதிரடி

By Keerthana

Published:

சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், தாம்பரம் காவல் ஆணையர் முதல் திருப்பூர் காவல் ஆணையர் வரை 18 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு இன்று இரவு வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது;

தமிழகத்தில் 18 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்.

தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் அமலாக்க பணியகம் சிஐடி ஏடிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தாம்பரம் காவல் ஆணையராக ஐபிஸ் அதிகாரி அபின் தினேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை தெற்கு கூடுதல் காவல் ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி கண்ணம் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை வடக்கு கூடுதல் காவல் ஆணையராக நரேந்திரன் நாயர் நியமிக்கப்பட்டுள்ளார்.

வடக்கு மண்டல ஐஜியாக அஸ்ரா கார்க் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தென் மண்டல ஐஜியாக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மாநகர காவல் ஆணையராக பிரவீன் குமார் அபினபு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாநகர காவல் ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி லட்சுமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சேலம் காவல் ஆணையர் விஜயகுமாரி ஆயுதப்படை ஐஜியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சைபர் கிரைம் பிரிவு கூடுதல் டிஜிபியாக சந்தீப் மிட்டல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஆயுதப்படை பிரிவு ஏடிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் காவல்துறை தலைவர் அலுவலக ஏடிஜிபியாக வெங்கட்ராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சிபிசிஐடி ஐஜியாக உள்ள டிஎஸ் அன்புவிடம் கூடுதல் பொறுப்பாக சென்னை சிபிசிஐடி ஏடிஜிபி பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடலோர காவல் படை ஏடிஜிபியாக சஞ்சய் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக ராஜீவ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு அந்தஅறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.