CLBIL Score விதிகள்: CIBIL Score தொடர்பான 5 புதிய விதிகளை RBI அறிவித்துள்ளது… முழு விவரங்கள் இதோ…

By Meena

Published:

CIBIL Score என்பது 300 மற்றும் 900 வரையிலான மூன்று இலக்க எண்களாகும். இது உங்கள் கடன் தகுதியை குறிக்கிறது. அதிக மதிப்பெண் கொண்ட CIBIL Score கிரெடிட் கார்ட்களில் கடன் பெற விரைவான ஒப்புதல்களை வழங்கும். கடன் பெறுவதற்கு தேவைப்படும் குறைந்தபட்ச கிரெடிட் ஸ்கோர் 685 ஆகும்.

இன்றைய சூழ்நிலையில் சாமானிய மக்களால் தவிர்க்க முடியாத ஒன்று கடன் பெறுவது. பெரும்பாலான தனியார் வங்கிகள் வட்டிலியில்லா அல்லது குறைந்த வட்டியில் கடன்களை வழங்க முன்வருவதாக விளம்பரங்களை நாம் பார்த்திருப்போம்.

யாரென்றே அறியாத சாதாரண மனிதரை நம்பி எப்படி கடன் கொடுப்பார்கள். அப்படி கடன் வழங்க உதவுவது தான் இந்த CIBIL Score என்பதாகும். CIBIL என்பது Central Information Bureau India Limited ஆகும். இது நமது வரவு செலவு கணக்கை வைத்து சிபில் ஸ்கோரை கணக்கு செய்து எல்லா வங்கிகளும் பார்க்கும் படி ஆன்லைனில் பதிவேற்றம் செய்துவிடும்.

தற்போது இந்த சிபில் ஸ்கோர் தொடர்பான 5 முக்கிய விதிகளை RBI அறிவித்திருக்கிறது. கிரெடிட் ஸ்கோர் தொடர்பாக ரிசர்வ் வங்கிக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதன் காரணமாக, சில மாதங்களுக்கு முன்பு, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) CIBIL மதிப்பெண் தொடர்பாக ஒரு பெரிய புதுப்பிப்பை வெளியிட்டது மற்றும் விதிகள் கடுமையாக்கப்பட்டன. புதிய விதிகள் ஏப்ரல் 2024 முதல் அமலுக்கு வந்துள்ளன. இதன் கீழ், ரிசர்வ் வங்கி மொத்தம் 5 விதிகளை உருவாக்கி செயல்படுத்தியது, அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

1- எந்த வாங்கியாயினும் CIBIL ஐ சரிபார்க்க விரும்பினால் அந்த தகவலை SMS அல்லது email மூலம் வாடிக்கையாளருக்கு அனுப்பப்பட வேண்டும்.
2- கடன் வேண்டி விண்ணப்ப கோரிக்கையை நிராகரிப்பதற்கான காரணத்தைக் கூறுவது அவசியம்.
3- வருடத்திற்கு ஒருமுறை வாடிக்கையாளர்களுக்கு முழு கடன் அறிக்கையை இலவசமாக வழங்க வேண்டும்.
4- இயல்புநிலையைப் புகாரளிக்கும் முன் வாடிக்கையாளருக்குத் தெரிவிக்க வேண்டியது அவசியம்.
5- எந்த புகார் ஆனாலும் 30 நாட்களுக்குள் தீர்க்கப்பட வேண்டும்.

Tags: CIBIL Score