எந்த ஒரு இந்தியப் படத்திற்கும் இல்லாத வகையில் கடந்த வாரம் வெளியான கல்கி 2898 AD திரைப்படம் வெளியான 5 நாட்களில் 500 கோடிக்கும் மேல் வசூலை ஈட்டி பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக ஜொலிக்கிறது. நாக் அஸ்வின் இயக்கத்தில் கடந்த ஜுன் 27-,ல் வெளியான கல்கி 2898 AD திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே உலகம் முழுக்க வெளியானது. எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்யும் வகையில் ஹாலிவுட் படங்களுக்கு நிகராக கிராபிக்ஸ் காட்சிகள், சண்டைக் காட்சிகள், மாறுபட்ட திரைக்கதை உள்ளிட்டவற்றால் கல்கி 2898 AD திரைப்படம் வசூல் மழையில் நனைந்து கொண்டிருக்கிறது.
பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே, திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள கல்கி 2898 AD படத்தை வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மகபாரதக் கதையுடன், சயிட்டிபிக் கதையைக் கலந்து ஒரு வராற்றுப் படமாகக் கொடுத்திருக்கின்றனர். மொத்தம் 600 பட்ஜெட்டில் உருவான கல்கி படம் வெளியான 5 நாட்களில் 550 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.
இந்நிலையில் இந்தப் படத்தில் நடித்த நடிகர்களின் சம்பள விபரம் வெளியாகி உள்ளது. மொத்தம் 181 நிமிடங்கள் ஓடக் கூடிய கல்கி 2898 AD படத்தில் ஹீரோவாக நடித்த பிரபாஸ் மொத்தம் 1 மணிநேரம் 2 நிமிடங்கள் 23 வினாடிகள் திரையில் தோன்றுகிறார். பிரபாஸ் சம்பளம் மட்டும் கிட்டத்தட்ட 150 கோடி. அதாவது மொத்த பட்ஜெட்டில் 25%.
இதனையடுத்து அமிதாப் பச்சன் 25 நிமிடங்கள் 19 வினாடிகள் திரையில் தோன்றுவார். இவரது சம்பளம் 25 கோடி. அடுத்ததாக வில்லனாக நடித்த கமல்ஹாசன் 7 நிமிடங்களே திரையில் தோன்றி 20 கோடி சம்பளம் பெற்றுள்ளார்.
ஹீரோயினாக நடித்த தீபிகா படுகோனே 25 நிமிடங்கள் திரையில் தோன்றி 5 கோடி ஊதியம் பெற்றுள்ளார். திஷா பதானி 10 நிமிடங்கள் மட்டுமே வந்து 2 கோடி சம்பளம் பெற்றுள்ளார். இப்படி படத்தில் முக்கிய நடிகர்களின் ஊதியமே கிட்டத்தட்ட 35% செலவான நிலையில் மீதப் பட்ஜெட்டில் மொத்த படத்தையும் முடித்துள்ளனர். தற்போது படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் வசூலில் மிரள வைக்கிறது. விரைவில் 1000 கோடியைத் தாண்டும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.