அஜீத்துக்கு மாஸ் பாட்டு எழுதிய கவிஞர் வாலி.. வரிகளைக் கேட்டு மிரண்டு போன ஏ.ஆர். முருகதாஸ்.. இப்படி ஒரு தீர்க்கதரிசியா?

தமிழ் சினிமாவில் கவிஞர் கண்ணதாசனுக்கு அடுத்த படியாக எம்.ஜி.ஆர்.,- சிவாஜி காலம் முதல் அனிருத் காலம் வரை பாடல்கள் எழுதி பல்வேறு நடிகர்களின் வெற்றிக்கு முக்கிய ஏணிப்படியாக விளங்கியவர் கவிஞர் வாலி. கண்ணதாசன் எப்படி ஒரு தத்துவப் பாடலில் தீர்க்கதரிசியாக விளங்கினாரோ அதேபோல் வாலியும் தீர்க்கதரிசியாக விளங்கினார். அதற்கு உதாரணம் தான் இந்தப் பாடல். இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் எஸ்.ஜே. சூர்யாவிடம் உதவியாளராகப் பணியாற்றி பின் முதன் முதலாக இயக்கிய படம் தான் தீனா.

கடந்த 2001-ல் வெளிவந்த தீனா அஜீத்தை முற்றிலும் ஆக்சன் ஹீரோவாக மாற்றியது. தனது முதல் படத்திலேயே பஞ்ச் வசனங்கள், மாஸ்,சண்டைக் காட்சிகள், கமர்ஷியல் என அத்தனையும் கலந்து ஒரு சூப்பர் ஹிட் படத்தினைக் கொடுத்தார் ஏ.ஆர். முருகதாஸ். இந்தப் படத்திலிருந்துதான் அஜீத்துக்கு தல என்ற பெயர் வந்தது அனைவருக்கும் தெரிந்ததே.

தீனா படத்தின் வெற்றிக்கு முக்கியப் பங்கு வகித்ததில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கும், கவிஞர் வாலிக்கும் முக்கிய பங்கு உண்டு. சமகாலத்தவரும் கேட்கும் வண்ணம் ஆங்கிலச் சொற்களைக் கலந்து புது டிரண்டில் பாடல்களை உருவாக்கினார் வாலி. குறிப்பாக காதல் வெப்சைட்.., சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்.., நீ இல்லை என்றால்.. போன்ற பாடல்கள் ரிபீட் மோடில் கேட்க வைத்தன. இப்படத்தில் இடம்பெற்ற மற்றொரு பாடல் தான் வத்திக்குச்சி பத்திக்காதுடா பாடல்.. நடிகை நக்மா இந்த ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியிருப்பார்.

படையப்பாவின் நீலாம்பரி கதாபாத்திரத்தை இவங்கள மனசில் வச்சு தான் எழுதினேன்… கே. எஸ். ரவிக்குமார் பகிர்வு…

இந்தப் பாடலை கவிஞர் வாலி எழுதி முடித்தவுடன் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் அப்படியே உட்கார்ந்திருந்தாராம். பாடல் எப்படி உள்ளது எதைச் சேர்க்கலாம்.. நீக்கலாம் என்று எதுவுமே கூறவில்லையாம். உடனே கவிஞர் வாலி ஏ.ஆர். முருகதாஸிடம் இந்தப் பாட்டு பிடிச்சிருக்கா இல்லையா என்று கேட்டுள்ளார்.

ஏ.ஆர். முருகதாஸ் ஒருகனம் வாலியைப் பார்த்து வியந்து போய் இந்தப் படத்தில் அஜீத் வாயில் தீக்குச்சி வைத்தபடியே ஆக்சன் காட்சிகளில் வருவார். நீங்கள் அதை உணர்த்துவது போல் இந்தப் பாடலில் முதல் வரியிலேயே வத்திக்குச்சி பத்திக்காதுடா என்று எழுதியுள்ளீர்கள்.. அதான் எப்படி இது சாத்தியமானது என வியந்தேன் என்று வாலியைப் பார்த்துக் கூறியிருக்கிறார்.

இப்படித்தான் சில நேரங்களில் நம்மையும் அறியாமல் ஏதோ ஓர் சக்தி உள்ளுணர்வைத் தூண்டி ஒன்றுக்கொன்று சம்பந்தப்படுத்தும் விதமாக அமையும். அந்த வகையில் கவிஞர் வாலியும் படத்தின் கதையே தெரியாமல் எழுதிய பாடல் அதனுடன் நெருங்கிய தொடர்பு கொண்டு ஹிட் கொடுத்து அவர் ஒரு தீர்க்கதரிசி என்பதை மீண்டும் நிரூபிக்க வைத்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews