இனிமே இவர்கள் ராஜ்ஜியம்தான்! ரெண்டு அல்டிமேட் ஸ்டார்களுடன் இணையும் லாரன்ஸ்.. படம் வேற லெவல்

சந்திரமுகி 2 க்கு பிறகு லாரன்ஸ் நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் தயாரிப்பதாக தகவல் வெளியானது. முதலில் இந்த படத்தை லோகேஷின் நண்பரான ரத்தினகுமார்தான் இயக்குவதாக இருந்தது. ஆனால் இந்த படத்தில் இருந்து ரத்தினகுமார்…

raghava lawrence fahadh and sj suryah

சந்திரமுகி 2 க்கு பிறகு லாரன்ஸ் நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் தயாரிப்பதாக தகவல் வெளியானது. முதலில் இந்த படத்தை லோகேஷின் நண்பரான ரத்தினகுமார்தான் இயக்குவதாக இருந்தது.

ஆனால் இந்த படத்தில் இருந்து ரத்தினகுமார் வெளியேறி விட்டார்.காரணம் ரஜினிக்கும் விஜய்க்கும் இடையேயான பஞ்சாயத்து சமயத்தில் ரஜினிக்கு எதிராக ஒரு நெகட்டிவ் கமெண்ட் ரத்தினகுமார் தட்டி விட்டதால் இந்த படத்தில் இருந்து வெளியேறி இருப்பார் என தெரிகிறது.

காரணம் ரஜினியை தனது குருவாகவே நினைக்கும் லாரன்ஸ், ரஜினியை பத்தி யாரு என்ன சொன்னாலும் அதை தாங்கிக் கொள்ள மாட்டார். அப்படி இருக்கையில் தன் படத்தை அவரை வைத்து எப்படி எடுப்பார் .

அதனாலயே ரத்தினகுமார் இந்த படத்தில் இருந்து விலகி இருப்பார் என சொல்லப்படுகிறது. அவருக்கு பதிலாக இப்போது லாரன்ஸ் நடிக்கும் இந்த படத்தை சுல்தான், ரெமோ போன்ற படங்களை இயக்கிய பாக்கியராஜ் தான் இயக்க இருக்கிறாராம் .இப்போது வந்த தகவல் படி இந்த படத்தில் மேலும் இரு நடிகர்கள் இணையே இருப்பதாக சொல்லப்படுகிறது.

அவர்கள் வேறு யாருமில்லை பகத் பாசிலும் எஸ் ஜே சூர்யாவும் தான். ஏற்கனவே நடிப்பில் பெரும் அரக்கர்களாக இவர்களை அனைவரும் கூறிக்கொண்டு வருகிறார்கள் .அதற்கு ஏற்ப இவர்கள் நடிப்பும் அனைவரையும் பிரமிக்க வைத்து வருகிறது. இதில் இருவரும் ஒன்று சேரும்போது அந்தப் படத்தின் வெற்றிக்கு ஒரு பெரும் உறுதுணையாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது .

ஏற்கனவே மலையாளத்தில் இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது .எஸ் ஜே சூர்யாவுக்கு மலையாளத்தில் அதுதான் முதல் படமாம்.