இடஒதுக்கீட்டால் என்ன நன்மை நேர்ந்துவிட்டது? 97% மதிப்பெண் எடுத்த மாணவியின் வேதனை..!

Published:

தான் 97 சதவீத மதிப்பெண் எடுத்த போதும்,  தனக்கு கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்றும் ஆனால் தன்னுடைய நண்பர் 60% மதிப்பெண் எடுத்து அதே கல்லூரியில் சேர்ந்து விட்டார் என்றும் இட ஒதுக்கீடு குறித்து மாணவி ஒருவர் மிகவும் வருத்தமாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் இட ஒதுக்கீடு தேவையா?  இட ஒதுக்கீட்டால் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே பயன் பெறுகிறார்கள் என்றும் தாழ்த்தப்பட்ட இனத்தில் கூட பலருக்கும் இந்த இட ஒதுக்கீடு பயன் அளிக்கவில்லை என்றும் ஏற்கனவே இட ஒதுக்கீட்டை பயன்படுத்தி முன்னேறிய பிரிவினர்கள் மட்டுமே இட ஒதுக்கீட்டை பயன்படுத்தி மேலும் நன்மை பெற்று வருகிறார்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராஷி பாண்டே என்பவர் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் கல்லூரியில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு எழுதியுள்ளார். அந்த நுழைவு தேர்வில் அவர் 97 மதிப்பெண்கள் பெற்ற நிலையில் அவருக்கு கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. ஏனென்றால் அவர் பொது பிரிவை சேர்ந்தவர். ஆனால் அதே நேரத்தில் அவருடன் படித்த மாணவர் ஒருவர் 60% மதிப்பெண்கள் பெற்று அதே கல்லூரியில் இடம் பிடித்துவிட்டார். ஏனெனில் அவர் பிற்படுத்த வகுப்பை சேர்ந்தவர் என்றும் ஆனால் அதே நேரத்தில் வசதியானவர் என்றும் ராஷி பாண்டே கூறியுள்ளார்.

நான் ஏழை, எனக்கு சொந்த வீடு கூட இல்லை, வாடகை வீட்டில் தான் நாங்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறோம், பொது பிரிவில் இருக்கும் ஒரே காரணத்தினால் எனக்கு 97 சதவீதம் மதிப்பெண் இருந்தும் கல்லூரியில் படிக்க இடம் கிடைக்கவில்லை, ஆனால் பிற்படுத்தப்பட்ட பிரிவு என்பதால் பணக்கார பையன் ஒருவருக்கு இடம் கிடைத்துள்ளது’ என்று அவர் வருத்தத்துடன் கூறியுள்ளார்.

அவருடைய இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சுமார் 8 லட்சம் பேர் இந்த பதிவை லைக் செய்துள்ளனர். மேலும் இட ஒதுக்கீடு என்பது நிச்சயம் சேர வேண்டியவர்களுக்கு சேருகிறதா என்ற கேள்வியையும் பலர் எழுப்பி உள்ளனர். இட ஒதுக்கீடு என்பது சாதியின் அடிப்படையில் அல்லாமல் நிதி நிலைமையின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் ராஷி பாண்டே கருத்துக்கு சிலர் கண்டனமும் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடப்பட்டது.

மேலும் உங்களுக்காக...