தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியைத் துவங்கியுள்ள நடிகர் விஜய் சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகி அரசியலில் ஈடுபடுவேன் என்றார். ஆனால் இப்போது அவருக்கு அடுத்தடுத்த படங்கள் வந்த வண்ணம் உள்ளன. தற்போது கோட் படத்திற்கான பணிகள் நடந்து வருகிறது.
தொடர்ந்து தளபதி 69 கண்டிப்பாக உண்டு என்றார்கள். அதை எச்.வினோத் தான் இயக்குகிறார் என்றார்கள். அதுதான் கடைசி படம் என்றர்கள். அதன் பிறகு தளபதி 70ம் கட்டாயம் இருக்கும் என்கிறார் ஒரு சினிமா பிரபலம். அதற்கான காணத்தையும் இவர் சொல்வது தான் சிறப்பு.
கேப்டன் மில்லர் படத்தில் தனுஷின் நண்பனாக வருபவர் அருணோதயன். இவர் நடிகர் விஜயின் 70வது படம் குறித்து என்ன சொல்கிறார்னு பார்ப்போம்.
விஜய் 70 ஐ வெற்றிமாறன் சார் பண்ணா தான் நல்லாருக்கும். கலெக்ஷனை அள்ளணும்னா அட்லீ சார் தான் பண்ணனும். ஆனா கடைசி படம் அதுவாகத் தான் இருக்கும்னா அதை வெற்றி மாறன் தான் பண்ணனும். அரசியலுக்குக் களம் இறங்கி வேலை செய்வார்.
ஆனால் முழுக்க அரசியலுக்கு வரமாட்டாரு. படத்தை இடையில நிறுத்த மாட்டாரு. ஏன்னா அவருக்கான கேப் இருக்கு. இன்னும் யங்கா இருக்காரு. தமிழ்சினிமாவுல அவருக்கான தேவை இருக்கு.
பீஸ்ட் படம் வந்து சரியாக போகலன்னு சொன்னாங்க. ஆனா கலெக்ஷன்ல 200 கோடி. அப்படித்தான் லியோ. 1000 கோடின்னு பேசுனோம். ஆனால் போகல. ஏன்னா அவங்க பெரிய பெரிய மால்கள்ல ரிலீஸ் பண்ணல. ஆனா அதுவே நல்ல கலெக்ஷனாச்சு. அப்படின்னா தேவை இருக்கு. முதல் பண்ணுனா காசை எடுக்க முடியும்னா அவரோட தேவை இருக்கு.
அவரை வச்சி இன்வெஸ்ட் பண்ணினா மினிமம் கேரண்டி. 200 கோடி, 300 கோடி மினிமம் கேரண்டியாகுது. ரஜினி சம்பளத்தோட கம்பேர் பண்றாங்க. அவரையும் மிஞ்சிடுவாரான்னு கேள்வி எழுகிறது. சில படங்கள் ரஜினிக்கே மிஸ் ஆயிடுது.
ஆனால் விஜய்க்கு அப்படி அல்ல. அதனால் மினிமம் கேரண்டி கொடுப்பதால் விஜய், ரஜினியையும் தாண்டி சம்பளம் வாங்கினாலும் ஆச்சரியமில்லை. அந்த வகையில் விஜய் தான் கெத்து. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இவர் இப்படி சொல்ல இயக்குனர் ஷங்கரின் கைவண்ணத்தில் தளபதி 70 வருகிறது என்றும் ஒரு பேச்சு அடிபடுகிறது. அவருக்கு என்று ஸ்பெஷலான கதையை ரெடி பண்ணியிருக்காராம் ஷங்கர்.