’எதிர்நீச்சல்’ முடிந்ததும் பிசினஸ் ஆரம்பித்த சீரியல் நடிகை.. ரசிகர்கள் வாழ்த்து..!

சன் டிவியில் ஒளிபரப்பான ’எதிர்நீச்சல்’ சீரியல் சமீபத்தில் முடிந்த நிலையில் இந்த சீரியலில் நடித்த நடிகர்கள், நடிகைகள் அடுத்த சீரியலுக்காக காத்திருக்கும் நிலையில் இந்த சீரியலில் நந்தினி என்ற கேரக்டரில் நடித்த ஹரிப்பிரியா சொந்தமாக…

ethirneechal

சன் டிவியில் ஒளிபரப்பான ’எதிர்நீச்சல்’ சீரியல் சமீபத்தில் முடிந்த நிலையில் இந்த சீரியலில் நடித்த நடிகர்கள், நடிகைகள் அடுத்த சீரியலுக்காக காத்திருக்கும் நிலையில் இந்த சீரியலில் நந்தினி என்ற கேரக்டரில் நடித்த ஹரிப்பிரியா சொந்தமாக பிசினஸ் தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.

சன் டிவியில் ஒளிபரப்பான ’எதிர்நீச்சல்’ சீரியல் 700 எபிசோடுகளுக்கு மேல் வெற்றிகரமாக சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென சன் டிவியுடன் இயக்குனர் திருச்செல்வம் அவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக உடனடியாக முடிக்கப்பட்டது.

இதனை அடுத்து திருச்செல்வம் அடுத்த சீரியலுக்கு தற்போது தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலில் நடித்த நடிகர் நடிகைகளும் அடுத்த சீரியலை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் இந்த சீரியலில் நந்தினி என்ற கேரக்டரில் நடித்து அனைவரின் மனதையும் கவர்ந்த நடிகை ஹரிப்பிரியா பிஎஸ்சி சைக்காலஜி படித்திருப்பதோடு நடனம் இசை ஆகியவற்றில் அதிக ஆர்வம் உள்ளவர் என்பதும் முறைப்படி அவர் நடனத்தை கற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்லூரியில் படிக்கும் போது எதிர்காலத்தில் ஒரு இசை நடன பள்ளி தொடங்க வேண்டும் என்ற கனவுடன் இருந்த ஹரிப்பிரியா தற்போது அந்த கனவை நனவாக்கியுள்ளார். இதனை அடுத்து சென்னையில் உள்ள கோடம்பாக்கம் மற்றும் போரூர் ஆகிய இரண்டு பகுதிகளில் தனது இசை மற்றும் நடன பள்ளியை தொடங்கியுள்ள ஹரிப்பிரியா ஒரு மாணவருக்கு 2000 ரூபாய் கட்டணம் என்று அறிவித்துள்ளார். மேலும் ஆன்லைன் மூலமும் நடனம் இசை ஆகியவை கற்றுக் கொடுக்கப்படும் என்றும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

’எதிர்நீச்சல்’ சீரியல் முடிந்ததும் அடுத்த சீரியலை எதிர்நோக்கி காத்திருக்காமல் உடனடியாக பிசினஸ் ஆரம்பித்த ஹரிப்பிரியாவுக்கு ரசிகர்கள் மற்றும் சக நடிகர்,நடிகைகள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

haripriya