ஜாதியை வைத்து படங்களை எடுக்கும் இயக்குனர்களைப் பற்றி வெளிப்படையாக பேசிய சமுத்திரக்கனி…

By Meena

Published:

சமுத்திரக்கனி தமிழ்நாட்டில் உள்ள ராஜபாளையத்தில் பிறந்து வளர்ந்தவர். தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழித் திரைப்படங்களில் பணியாற்றும் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார். இளங்கலை சட்டம் பயின்று பட்டம் பெற்ற சமுத்திரக்கனி சினிமாவில் நடிப்பு மற்றும் இயக்கம் மீதிருந்த ஆர்வத்தால் சென்னைக்கு வந்தார்.

ஆரம்பத்தில் 1997 இல் சுந்தர் கே. விஜயனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். பின்னர் கே. பாலசந்தர் அவர்களால் கவனிக்கப்பட்டு அவரது 100 வது படமான ‘பார்த்தாலே பரவசம்’ திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். இது தவிர 2000 களின் ஆரம்ப காலகட்டத்தில் சின்னத்திரையில் ஒளிபரப்பான ஹிட்டான மெகா தொடர்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார் சமுத்திரக்கனி.

2009 ஆம் ஆண்டு ‘நாடோடிகள்’ படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். முதல் படமே வெற்றிப் படமாக சமுத்திரக்கனிக்கு அமைந்தது. தொடர்ந்து போராளி (2011), சாட்டை (2012), நிமிர்ந்து நில் (2014), அப்பா(2016) போன்ற சமூக கருத்துள்ள வெற்றித் திரைப்படங்களை இயக்கியுள்ளார். இது தவிர முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து பிரபலமானவர் சமுத்திரக்கனி.

தற்போது, ஜாதிகளை அடிப்படையாக வைத்து வரும் படங்களைப் பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார் சமுத்திரக்கனி. அவர் கூறியது என்னவென்றால், பா. ரஞ்சித் மட்டுமல்ல, தமிழ் சினிமாவுல எல்லா ஜாதி பற்றியும் படம் எடுக்குறாங்க , படம் எடுக்கிற இயக்குனர்கள் அவங்க ஜாதியை உயர்த்திக் காட்டி தான் எடுக்குறாங்க. படம் எடுக்குற இயக்குனர் என்ன ஜாதியோ அந்த ஜாதி ஆளுங்க தான் படத்துல இருப்பாங்க என்று ஓபனாக பேசியுள்ளார் சமுத்திரக்கனி.