கமல் சார் கூட இந்த இரண்டு படங்கள் நான் பண்ண வேண்டியது… ஆனால் பண்ணாதது நல்லதுதான்… வெள்ளந்தியாக பேசிய அரவிந்த்சாமி…

அரவிந்த்சாமி தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளியில் தொலைக்காட்சி நடிகர் டெல்லி குமாருக்கு மகனாக பிறந்து தனது மாமாவிடம் வளர்ந்தார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் நடித்து பிரபலமான நடிகர் ஆவார்.

ஆரம்பத்தில் விளம்பரத்தில் அரவிந்த்சாமி நடித்ததை பார்த்த மணிரத்னம் அவரை அழைத்தார். பின்னர் தான் இயக்கிய ரஜினிகாந்த், மம்மூட்டி நடித்த ப்ளாக்பஸ்டர் திரைப்படமான ‘தளபதி’ திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து தமிழ் சினிமாவில் அறிமுப்படுத்தினார்.

அவரின் திறமையை பார்த்த மணிரத்னம் 1992 ஆம் ஆண்டு ‘ரோஜா’ திரைப்படத்தில் நாயகனாக நடிக்க வைத்தார். அரசியல் திரைப்படமான ‘ரோஜா’ மாபெரும் வெற்றிப் பெற்றது. அடுத்ததாக மணிரத்னத்தின் ஹிட் படமான ‘பம்பாய்’ படத்தில் நடித்தார் அரவிந்த்சாமி. இவ்விரு படங்களும் மாநில விருதுகளை வென்றது.

தொடர்ந்து ‘இந்திரா’, ‘மௌனம்’, ‘மின்சார கனவு’, ‘என் சுவாச காற்றே’ போன்ற திரைப்படங்களில் நடித்தார் அரவிந்த்சாமி. 2005 ஆம் ஆண்டு ஒரு விபத்தில் சிக்கி முதுகெலும்பில் காயம் ஏற்பட்டு நடக்க முடியாமல் பல வருடங்கள் சிகிச்சை எடுத்து வந்தார் அரவிந்த்சாமி.

தீவிர சிகிச்சையின் பலனால் மீண்டு வந்து 2013 ஆம் ஆண்டு மறுபடியும் தனக்கு சினிமாவில் வாய்ப்பு அளித்த மணிரத்னம் அவர்களின் ‘கடல்’ திரைப்படம் மூலம் கம்பேக் கொடுத்தார். பின்னர் ‘தனி ஒருவன்’, ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, ‘செக்க சிவந்த வானம்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து தற்போது நடித்துக் கொண்டும் வருகிறார்.

தற்போது ஒரு நேர்காணலில் கலந்துக் கொண்ட அரவிந்த்சாமி தனது சினிமா அனுபவங்களை பகிர்ந்துக் கொண்ட போது, கமல் சார் கூட ‘அன்பே சிவம்’ படத்தில் மாதவன் கதாபாத்திரத்திலும், ‘தெனாலி’ படத்தில் ஜெயராம் கதாபாத்திரத்திலும் நான் நடிக்க வேண்டியது. நல்ல வேளை நான் பண்ணல. என்னைவிட மாதவன், ஜெயராம் அந்த கதாபாத்திரங்களில் நல்ல நடிச்சிருப்பாங்க. சில நேரங்களில் நாம மிஸ் பண்றது அந்த படங்களுக்கு நல்லதா இருக்கும் என்று வெள்ளந்தியாக பேசியுள்ளார் அரவிந்த்சாமி.