இனிமே இந்தக் கோயில்ல வி.ஐ.பி தரிசனம் கிடையாது.. அதிரடி முடிவெடுத்த பிரபல கோவில் நிர்வாகம்..

By John A

Published:

இந்தியாவின் பிரசித்தி ஆலயங்களில் ஒன்றான கேரளாவின் குருவாயூர் கோவிலில் இனி வி.ஐ.பி தரிசனம் கிடையாது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. வருகிற 1-ம் தேதி முதல் இந்த முடிவு அமலுக்கு வரும் எனவும் கூறப்பட்டுள்ளது.

வேத காலத்து பூஜை முறைகளையும், வழிபாட்டு நெறிமுறைகளையும் துளியளவு கூட மீறாமல் இன்றளவும் பின்பற்றி வரும் கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூர் கோவில் பிரபல வைணவத் திருத்தலமாக விளங்குகிறது. பூலோக வைகுண்டம் எனவும், தென் இந்தியாவின் துவாராக என்றும் அழைக்கப்படும் குருவாயூரப்பன் திருக்கோவில் இந்தியாவின் அதிக வருமானம் உள்ள கோவில்களில் ஒன்று. இந்தக் கோவிலில் ஆண்கள் மேல்சட்டை அணிந்து உள்ளே நுழைவது தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆண்கள் வேட்டி மட்டுமே அணிந்து குருவாயூரப்பனை தரிசிக்க வேண்டும் என்பது ஆகம விதி.

இனிமே எந்த ஆதரவும் கிடையாது.. நவீன் பட்நாயக் முடிவால் கதிகலங்கிய பாஜக.. பாராளுமன்றம் துவங்கிய முதல் நாளிலேயே விழுந்த அடி..

இங்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து வழிபடுகின்றனர். மேலும் பல திருமணங்களும் இங்கு நடைபெறுகிறது. இந்நிலையில் அதிகரித்து வரும் பக்தர்களுக்கு விரைவில் தரிசன முறையை அமல்படுத்தவும், கோவில் வழிபாட்டு நேரத்தினை அதிகரிக்கவும் குருவாயூர் கோவில் தேவாம்ச போர்டு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதில் வருகிற ஜுலை 1ம் தேதி முதல் வி.ஐ.பி மற்றும் சிறப்பு தரிசனத்திற்கு கட்டுப்பாடுகள் விதிப்பது பற்றி முடிவெடுக்கப்பட்டது. அதன்படி திங்கள், புதன், வெள்ளி மற்றும் பொது விடுமுறை நாட்களில் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை வி.ஐ.பி தரிசனத்தினை ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் மற்ற வழிபாடுகளுக்கு குறிப்பாக குழந்தைக்குச் சோறு ஊட்டுதல், நெய் விளக்கு வழிபாடுகளில் கலந்து கொள்பவர்களுக்கு இந்தக் கட்டுப்பாடு பொருந்தாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.