ஜடேஜா இனிமே டி 20 ஆடவே கூடாது.. வெளிய உட்கார வைங்க.. டி 20ல முக்கியமான விவரம் பார்த்து பதறிய ரசிகர்கள்..

By Ajith V

Published:

டி 20 உலக கோப்பையை பொருத்தவரையில் அதனை வெல்லத் தகுதியுடைய அணிகளில் ஒன்றாக இருந்து வருகிறது ரோஹித் ஷர்மாவின் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி. அவர்களின் பந்துவீச்சை பொறுத்த வரையில் நான்கு சுழற்பந்து வீச்சாளர்களுடன் பும்ரா, அர்ஷ்தீப் சிங், சிராஜ் உள்ளிட்ட வேகப்பந்து வீச்சாளர்களும் இடம்பிடித்திருந்தனர்.

இதுவரை நான்கு போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்திய அணியின் பந்து வீசு குறை சொல்ல முடியாத அளவுக்கு உள்ளது. ஆனால் டாப் ஆர்டர் பேட்டிங் எடுபடவே இல்லை. ரோஹித், கோலி என உலக கிரிக்கெட் கண்ட மிகச் சிறந்த பேட்ஸ்மேன்கள் உலக கோப்பையில் சிறிய அணிகளுக்கு எதிராக கூட ரன் அடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

சூர்யகுமார், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா என ஒரு சிலர் மட்டுமே தேவைப்படும் நேரத்தில் பேட்டிங் செய்து ரன்களை கொடுத்து வர இந்திய அணியில் சரி செய்ய வேண்டிய பேட்டிங் பிரச்சினைகள் ஏராளம் உள்ளது. கோலி, ரோஹித், ஷிவம் துபே என பலரும் சொதப்பி வரும் அதேவேளையில் ஆல்ரவுண்டராக இந்திய அணியில் இடம் பிடித்துள்ள ரவீந்திர ஜடேஜா லீக் சுற்றின் மூன்று போட்டிகளில் ஆடி ஒரு ரன்கூட அடிக்காமல் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் இருந்தார்.

ஃபீல்டிங்கில் கூட மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத ரவீந்திர ஜடேஜா, சூப்பர் 8 போட்டியில் நிச்சயம் இடம்பெறாமல் போவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் ஆடும் லெவனில் அவர் இடம் பிடித்திருந்தார். இந்த முறையாவது ஏதாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்த்தால் இந்திய அணி முதலில் பேட்டிங் இறங்கிய போது விக்கெட்டுகள் இழந்த இக்கட்டான நேரத்தில் வந்த ஜடேஜா, 7 ரன்களில் அவுட்டாகி இருந்தார்.

பந்து வீச்சில் ஒரு விக்கெட்டை அவர் எடுத்திருந்தாலும் பேட்டிங்கில் அவரது ஃபார்ம் நிச்சயம் அரையிறுதி அல்லது இறுதி போட்டி உள்ளிட்ட சமயத்தில் பெரிய தலைவலியாக இருக்கும் என்று தான் தெரிகிறது. இதனால் அவருக்கு பதிலாக சாம்சன் அல்லது ஜெய்ஸ்வாலை அணியில் இடம்பெறச் செய்ய வேண்டும் அல்லது ஜடேஜா நிச்சயம் இனிவரும் போட்டிகளில் நல்ல பேட்டிங்கை வெளிப்படுத்தியாக வேண்டும் என்ற கட்டாயமும் உள்ளது.

அப்படி இருக்கையில் தான் டி20 உலக கோப்பை போட்டிகளில் ஜடேஜா வைத்துள்ள மோசமான ஒரு புள்ளி விவரம், பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதுவரை டி 20 உலக கோப்பை போட்டிகளில் 104 பந்துகள் வரை சந்தித்துள்ள ஜடேஜா ஒரே ஒரு சிக்சர் மட்டும்தான் அடித்துள்ளார். ஐபிஎல் உள்ளிட்ட பல டி 20 போட்டிகளில் முக்கிய பேட்ஸ்மேனாக திகழும் ஜடேஜா டி20 உலக கோப்பை தொடரில் தொடர்ந்து தடுமாறி வருவது இந்திய அணிக்கு பெரிய தலைவலியாக தான் உள்ளது.