இன்றைய காலத்தில் அரசியலை பொறுத்தவரையில் மக்களுக்கு வேறுபட்ட கருத்துக்கள் தான் அதிகம் நிலவி வருகிறது. ஆனால் அதனையும் தாண்டி பெரும்பாலான மக்கள் அனைவருமே ஒரு நபருக்கு அரசியலில் தங்கள் வரவேற்பையும், ஆதரவையும் கொடுப்பது வழக்கமான ஒரு நிகழ்வாகும். அது மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியில் நிறைய நல்ல விஷயங்களை செய்து சிறந்த பெயர் எடுத்துள்ள பிரபலங்களும் கூட அரசியலில் நுழைந்தால் அவர்களுக்கு மக்கள் மத்தியில் ஆன ஆதரவு பெரிய அளவில் அதிகமாக இருக்கும்.
அப்படி மக்கள் மனதை வென்று விட்டால் நிச்சயம் அவர்கள் அரசியலில் பெரிய இடத்தை அடைவார்கள் என்பதை இந்திய அரசியலில் பல ஆளுமைகளையே நாம் உதாரணமாக சொல்லிக் கொண்டே போகலாம். அப்படி இருக்கையில் ஆந்திர மாநிலத்தில் எம்எல்ஏ ஒருவர் வென்றதற்காக அந்த தொகுதிக்கு உட்பட்ட கிராம மக்கள் செய்த விஷயம் ஒன்று ஒட்டு மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
சமீபத்தில் ஆந்திர பிரதேச மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் முடிவுகளும் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வந்த போது வெளியாகி இருந்தது. இதில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்று அவர் முதல்வராகவும் மாறி இருந்தார். இதனிடையே, சந்திரகிரி தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நானி என்பவர் வேட்பாளராக களமிறங்கி இருந்தார்.
இவர் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றும் அப்படி நடந்தால் நடந்து வந்து திருப்பதிக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதாகவும் உட்ல வங்கம் என்ற கிராம மக்கள் வேண்டிக் கொண்டதாக தகவல்கள் கூறுகின்றது. அப்படி ஒரு சூழலில் தான் ஒய். எஸ். ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை வீழ்த்திய நானி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தி இருந்தார்.
தாங்கள் விரும்பியது நடந்ததால் அந்த கிராம மக்கள் உற்சாகத்தில் திளைத்து போன நிலையில் அவர்கள் கூறியது போலவே திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக பாதயாத்திரை செல்லவும் முடிவு செய்துள்ளனர். இதனால் அந்த கிராமத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களும் குடும்பமாக ஊரை காலி செய்துவிட்டு நடைபயணமாக திருப்பதிக்கு சென்றுள்ளனர்.
இதனை கவனித்த எம்எல்ஏ நானியின் மனைவி அந்த கிராம மக்களுக்கு அன்னதானம் உள்ளிட்ட வெற்றி வழங்கி அவர்களை சிறப்பாக அனுப்பி வைத்ததும் குறிப்பிடத்தக்கது. தாங்கள் விரும்பிய நபர் எம்எல்ஏ தேர்தலில் வென்றதற்காக இப்படி ஒரு முடிவை எடுத்த கிராம மக்கள் செய்தது பலரையும் அசந்து பார்க்க வைத்துள்ளது.