தமிழ்த் திரையுலகில் அஜீத்தின் இடம் என்பது சற்று ரொம்பவே ஸ்பெஷலானது. ஏனெனில் எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் முயற்சி ஒன்றை மட்டுமே மூலதனமாகக் கொண்டு சினிமாலும், வாழ்க்கையிலும் பல சறுக்கல்களைத் தாண்டி இன்றும் விடாமுயற்சியாக இருந்து கொண்டிருப்பது தான் அவரது சிறப்பே. பலரது வாழ்விற்கு அஜீத் மிகவும் ஓர் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறார். அந்த வகையில் இயக்குநர் ஹெச். வினோத்தை மிகவும் கவர்ந்த மனிதர்களில் ஒருவராக அஜீத் திகழ்க்கிறார்.
அஜீத்தை வைத்து நேர்கொண்ட பார்வை, துணிவு, வலிமை ஆகிய மூன்று சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தவர். இந்த மூன்று படங்களில் நேர்கொண்டபார்வை அஜீத்தை வேறொரு தளத்தில் காட்டியது. அதேபோல் துணிவு, வலிமை ஆகிய இருபடங்களும் அஜீத் ரசிகர்களுக்கு செமவிருந்தாக அமைந்தது. இப்படி அஜீத்துடன் இவர் பணியாற்றிய மூன்று படங்களிலும் கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு மேல் அஜீத்துடன் ஒன்றாகப் பணிபுரிந்திருக்கிறார் ஹெச்.வினோத். மேலும் அஜீத்தைப் போல இவரும் மிக எளிமையான மனிதர்.
லிங்குசாமியிடம் சண்டக்கோழியான மீரா ஜாஸ்மின்.. சண்டைபோட்டு வாங்கிய சூப்பர் கதாபாத்திரம்
அஜீத் மேல் இவ்வளவு பற்று கொண்டது எப்படி என்று பேட்டி ஒன்றில் ஹெச்.வினோத் பகிர்ந்திருக்கிறார். அதில், சென்னையில் அவருக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் முதன் முதலாக மருத்துவம் படிப்பதற்காக சென்னை வந்திறங்கியுள்ளார். அப்போது அவர் கையில் வெறும் 2,000 மட்டுமே இருந்துள்ளது. இந்த பணத்தில் தான் அவர் ரூம், சாப்பாடு என அனைத்தும் சிலகாலம் சமாளிக்க முடியும். அப்போது அந்த நண்பர் கண்ணில் அஜீத் பட போஸ்டர் ஒன்று தென்பட அவருக்குள் நம்பிக்கை பிறந்திருக்கிறது.
எந்தவித பின்புலமும் இல்லாமல் ஒருவர் இன்று சினிமாவில் சாதித்தது மட்டுமின்றி பலருக்கும் ரோல் மாடலாகத் திகழ்கிறார். எனவே அஜீத் போஸ்டரைப் பார்த்து வியந்து நாமும் அவர்போல் முன்னேற வேண்டும் என்ற நம்பிக்கையையும் அந்த நண்பருக்கு விதைத்திருக்கிறார் அஜீத். இதனை அறிந்த ஹெச்.வினோத் அன்றிலிருந்து அஜீத்தின் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டு அவரை வைத்து படங்கள் இயக்க வேண்டும் என உறுதி பூண்டு தொடர்ச்சியாக மூன்று ஹிட் படங்களைக் கொடுத்திருக்கிறார்.