மைக் மோகனைப் பற்றி வந்த எய்ட்ஸ் நோய் வதந்தி.. உண்மையில் நடந்தது என்ன?

By John A

Published:

கன்னடத்தில் பாலுமகேந்திரா இயக்கிய கோகிலா படத்தின் மூலம் சினிமா உலகில் என்ட்ரி ஆனவர்தான் நடிகர் மோகன். தமிழிலும் பாலுமகேந்திராவே நெஞ்சத்தைக் கிள்ளாதே படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார். மோகனின் ராசியோ என்னவோ நடித்த 10 ஆண்டுகளுக்குக் பெரும்புகழ் பெற்றார்.

குறிப்பாக பயணங்கள் முடிவதில்லை, மௌனராகம், மெல்லத்திறந்தது கதவு, உதயகீதம், இதயக் கோயில், கிளிஞ்சல்கள் என பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்து வெள்ளிவிழா நாயகன் என்ற பெயரைப் பெற்றார். 1990களின் தொடக்கம் வரை மோகன் ராஜ்ஜியமே தமிழ்சினிமாவில் மேலோங்கி இருந்தது. பாடல்களால் கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்று மைக் மோகனாக திரையுலகில் வலம் வந்தார்.

அதன்பின் தமிழ்சினிமாவின் போக்கு மாறியது. அஜீத், விஜய், பிரசாந்த் ஆகியோர் என்ட்ரி கொடுத்தனர். தொடர்ந்து மோகன் மார்க்கெட் இழந்தார். ஒருகட்டத்தில் முற்றிலும் பட வாய்ப்புகளை இழந்தார். இதனால் மோகன் என்ன செய்கிறார் என்றே தெரியாமல் இருந்தது. இந்த தருணத்தில்தான் பேரிடியாய் ஒரு செய்தி பரவி அவரது ரசிகர்களை மட்டுமல்லாமல் தமிழ்த்திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதெல்லாம் ஒரு படமா என எழுந்து சென்றவர்களுக்கு ஷாக் கொடுத்த என்.எஸ்.கே.. அதிரிபுதிரி ஹிட் அடித்த ரகசியம்..

அந்தச் செய்திதான் நடிகர் மோகனுக்கு எய்ட்ஸ் நோய் வந்துவிட்டது எனவும், இன்னும் சில நாட்களே உயிரோடு இருப்பார் எனவும் தீயாய் செய்தி பரவியது. இதனால் தினசரி மோகன் வீட்டிற்கு ரசிகர்களும், மீடியாக்களும், திரையுலகைச் சார்ந்தவர்களும் படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர். ஆனால் இது முற்றிலும் பொய்யான செய்தி என பின்னர் தெரிந்தது. மோகன் நலமாகத்தான் இருக்கிறார் என அவரது குடும்பமும் நண்பர்களும் தெரிவித்தனர்.

அந்த தருணத்தில் மோகன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். தனக்கு வதந்தியால் இப்படி ஓர் இழுக்கு ஏற்பட்டிருப்பதைக்கண்டு அவர் மனம் உடையவில்லை. மாறாக அதை அவர் எதிர்கொண்டார். அவருக்கு எதிராகப் பரப்பப்பட்ட இந்த வதந்தி பற்றி மீடியாக்கள் கேட்டபொழுது நீங்களே உண்மை என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார்.

மேலும் அந்த செய்தியால் மனம் உடையாமல் அது வதந்தி எனத் தெரியும். எனக்கும் என்குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் நான் எப்படி என்று தெரியும் எனவே இது குறித்த விளக்கம் அளித்து அதைப் பெரிதாக்கவில்லை எனக் கூறி அதை அப்படியே விட்டிருக்கிறார். அதன்பின் நாளடைவில் அந்தச் செய்தி வெறும்புரளி என்றானபின் ரசிகர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். மோகனும் அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.