என்னோட பாட்டெல்லாம் சினிமா தலைப்பு வச்சுருக்காங்க.. இளையராஜாவை மறைமுகமாகத் தாக்கிய வைரமுத்து.. 

By John A

Published:

சமீப காலமாக சோஷியல் மீடியாக்களில் அதிகம் பகிரப்படுவது மெட்டுக்குப் பாட்டா? அல்லது பாட்டுக்கு மெட்டா என்ற கேள்வி. அதற்கு பல பட்டிமன்றங்கள் ஒருபக்கம் போய்க் கொண்டிருக்கும் நிலையில் இளையராஜாவும் தன் பங்குக்கு ஒருபுறம் இசையமைக்கும் பணிகளைக் காட்டிலும் நோட்டீஸ் விடும் பணிகளையே அதிகம் செய்து கொண்டிருக்கிறார்.

கூலி படத்தின் டீசருக்கு நோட்டீஸ், மஞ்சும்மல் பாய்ஸ் படத்துக்கு நோட்டீஸ் என இளையராஜா தன் இசையமைத்த படங்களின் இசையை யார் மீண்டும் தங்களது படங்களில் அனுமதி பெறாமல் பயன்படுத்தி இருக்கின்றனர் எனப் பார்த்து பார்த்து காப்புரிமைச் சட்டம் என்னும் அஸ்திவாரத்தைச் செலுத்துகிறார்.

இந்தப் பஞ்சாயத்தும் கடந்த சில வருடங்களாக ஒடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் வைரமுத்து, இளையராஜா கருத்து வேறுபாடு வந்த போது இசை பெரிதா.. பாடல் பெரிதா என்ற சண்டை வந்த பொழுது இளையராஜா ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா.. என்று மெட்டமைக்க அதற்கு வைரமுத்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தமிழுக்கில்லை தட்டுப்பாடு.. என எழுதி பதிலடி கொடுத்தார். இப்படி இருவருக்குள்ளான பனிப்போர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது.

வேண்டாம் என்று சொன்ன தமிழ் சினிமாவின் முதல் தேசிய விருதுப் பாடல்.. சாதித்தது எப்படி தெரியுமா?

இளையராஜா தான் இசையமைத்த படங்களுக்கு காப்புரிமை கேட்பதை பலரும் விமர்சிக்கின்றனர். இசை அனைவருக்கும் பொதுவானது. இளையராஜா சம்பளம் வாங்கித் தானே இசையமைத்துக் கொடுக்கிறார். அப்பொழுது அதன் உரிமை தயாரிப்பாளருக்குத் தானே சொந்தம் என்றும் ஒரு கருத்து நிலவி வருகிறது. இந்நிலையில் வைரமுத்து நிகழ்ச்சி ஒன்றில் தான் எழுதிய பாடல்களின் வரிகள் திரைப்படங்களின் தலைப்பாக வந்துள்ளது.

நீ தானே என் பொன்வசந்தம், விண்ணைத் தாண்டி வருவாயா.. போன்ற படங்களின் தலைப்புகள் இவரது பாட்டின் வரிகளில் இருந்து எடுக்கப்பட்டவையே. அப்பொழுது நானும் இதற்கு ராயல்டி கேட்பதா என்ற தொனியில் பேசி இருந்தார். இருந்தபோதும் தமிழ் வளர வேண்டும். நல்ல தமிழ்ச் சொற்கள் படத்தின் தலைப்பாக இருப்பதில் மகிழ்ச்சி. அது நான் இயற்றிய பாடல்களில் இருந்து எடுக்கப்பட்டதில் ஒன்றும் தவறில்லை. தமிழ் வளர்ந்தால், பரவினால் போதும் என்று அந்நிகழ்ச்சியில் பேசியிருந்தார் வைரமுத்து.