சத்யராஜ், ரஜினி இடையேயான மோதல் குறித்து பிரபல யூடியூபரும், சினிமா விமர்சகருமான செய்யாறு பாலு இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கர்நாடகா காவிரி நதி நீர் பிரச்சனையில் ரஜினி மேடையில் இருக்கும்போதே, ஒரு பெரிய நடிகர் வாட்டாள் நாகராஜ் ரசிகர் என ரஜினியைப் பார்த்தபடி சத்யராஜ் பேசினாராம். அதைக் கேட்டு ரஜினி எதுவும் பேசாமல் இருந்து விட்டாராம்.
நான் மகான் அல்ல, மிஸ்டர் பாரத படங்களில் ரஜினி படத்தில் நடித்து அசத்தினார். அதிலும் கொஞ்ச வயசிலேயே ரஜினிக்கு அப்பாவாக மிஸ்டர் பாரத் படத்தில் நடித்து இருந்தார். ‘என்னம்மா கண்ணு’ பாடல் அந்தப் படத்தில் தான் வரும். இருவருக்கும் சவாலான பாடலாக அமைந்தது.
தம்பிக்கு எந்த ஊரு படப்பிடிப்பில் சத்யராஜ் தனியாக சேர் போட்டு உட்கார்ந்து இருப்பாராம். அப்போது ரஜினி, மாதவி, சுலக்ஷனா ஆகியோர் தனியாக உட்கார்ந்து பேசுவார்களாம். அவர்களில் மாதவி ஆங்கிலம் சரளமாகப் பேசக்கூடியவர். அப்போது மாதவி ரஜினியிடம் ‘இவர் யார்? தனியா உட்கார்ந்து இருக்கார்… எதுவுமே பேசாம சைலண்டா இருக்கார்’ என கேட்டாராம்.
அதற்கு ரஜினி அவர் யாரு தெரியுமா? ‘நியூயார்க் பிலிம் இன்ஸ்டிட்யூட்ல வந்து லெக்சரர். தமிழ்நாட்டுக்காரர் தான். சும்மா இங்க ஹாப்பிக்காக நடிச்சிட்டுப் போறாரு. இவரு கூட பழகுனா ஹாலிவுட்ல எல்லாம் ரொம்ப ஈசியா நடிக்கலாம்’னு சொன்னார்.
அதைக் கேட்டதும் ரொம்ப உற்சாகமானாங்க மாதவி. மறுநாள் சத்யராஜ் காரில் இருந்து இறங்கி வந்தப்போ மாதவி நேரா போய் இங்கிலீஷ்ல பேச சத்யராஜ் திக்கித் திணறி சமாளிச்சாராம். அப்போ சுலக்ஷனா தூரத்துல உட்கார்ந்து விழுந்து விழுந்து சிரிச்சாங்களாம்.
அதுக்கு அப்புறம் தான் இது ரஜினி செய்த வேலைன்னு சத்யராஜிக்கேத் தெரிஞ்சதாம். அதை வந்து இவரு தமாஷா எடுத்துக்காம ரஜினி நம்மை அவமானப்படுத்திட்டாருன்னு நினைச்சாராம். அங்க இருந்து தான் ரஜினிக்கும், சத்யராஜிக்கும் மோதல் ஆரம்பிச்சது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ரஜினியின் கனவான 100வது படம் ஸ்ரீராகவேந்திரா. இந்தப்படத்தை பாலசந்தர் தயாரிக்க எஸ்.பி.முத்துராமன் இயக்கினார். படத்தில் சத்யராஜ், சில்க் நடித்த கவர்ச்சி பாடலும் ரெடியானது. படத்தைப் பார்த்த பாலசந்தர் ஒரு பக்திப் படத்துல கவர்ச்சி பாடல் தேவையா என்று கேட்க அதைத் தூக்கி விட்டார்களாம்.
இந்தப் பாடலைத் தூக்க ரஜினி தான் காரணம் என அவருக்கு வேண்டாதவர்கள் சத்யராஜிடம் கொளுத்திப் போட அதுவும் சத்யராஜ், ரஜினி மோதலுக்குக் காரணமாகி விட்டதாம். நமக்குத் திரை எதிரியான ரஜினிக்கு இவர் எதிரின்னா, நாம் நண்பராக்கி விடுவோம் என கமல் நினைத்தாராம்.
அதனால் கமல் படங்களில் சத்யராஜ் நடிக்க ஆரம்பித்தார். கமலே சத்யராஜை வைத்து கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற படத்தைத் தயாரித்தார். அதனால் ரஜினியின் கூலி படத்தில் சத்யராஜ் நடிப்பதற்கு சான்ஸ் குறைவு தான். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.