தமிழ் நாடகங்களின் தந்தை என அழைக்கப்படும் அவ்வை சண்முகத்தின் பெயரை சற்றே மாற்றி அவ்வை சண்முகி என தலைப்பினை வைத்து படம் முழுக்க பெண் கதாபாத்திரத்தில் நடிப்பில் வெளுத்து வாங்கிய திரைப்படம் தான் அவ்வை சண்முகி. அவ்வை சண்முகி திரைப்படத்தில் கமலுடன் மீனா, நாசர், ஹீரா மணிவண்ணன் ஆகியோர் நடித்திருப்பர். இதில் முக்கிய கதாபாத்திரமாக நடித்தவர் காதல் மன்னன் ஜெமினி கணேசன். இதில் கமலின் அவ்வை சண்முகி வேடத்தினைப் பார்த்து தள்ளாத வயதிலும் அவர் மேல் ஒருதலைக் காதல் கொள்ளும் லொள்ளு தாத்தா கதாபாத்திரத்தில் காதல் மன்னன் ஜொலித்திருப்பார்.
இயல்பாகவே தமிழ் சினிமாவில் அந்தக் காலத்தில் ஹீரோயின்களுடன் நெருக்கமான காட்சிகள், டூயட் பாடல்கள், காதல் காட்சிகளில் ரசிகர்களைக் கிறங்கடித்தவர் ஜெமினிகணேசன். எனவே அவ்வை சண்முகி படத்திலும் பெண் கமலை ஜொள்ளுவிட்டுக் கொண்டிருப்பார். இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய இப்படத்திற்கு இசையமைத்தவர் தேவா. ஆரம்பத்தில் ஜெமினிகணேசன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தானாம். அதன்பின் சிவாஜியிடம் போய் கதை சொல்ல அவருக்கும் பிடித்திருக்கிறது.
இதனிடையே அப்போது சிவாஜி கணேசனுக்கு உடல் நலம் குன்றியிருந்தது. எனவே சிவாஜியின் மகன் ராம்குமார் தந்தையின் உடல் நலம் இப்போது சரியில்லை. அவரை அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்று மருத்துவ சிகிச்சை அளிக்க உள்ளோம். இதனால் இப்போது அவரால் நடிக்க முடியாது எனத் தெரிவித்திருக்கிறார்.
அடுத்த மூக்குத்தி அம்மனாக தரிசனம் காட்ட போகும் திரிஷா…சாமி ஹீரோயினுக்கே சாமி கெட்டப்-ஆ?
ஆனால் சிவாஜிக்கு இந்த வாய்ப்பினை இழக்கிறோமே என உள்ளுற வருத்தம் ஏற்பட்டதாம். மேலும் அவரே கதாபாத்திரத்தின் தன்மை அறிந்து யாரை வேண்டுமானாலும் காதலிக்கிற கதாபாத்திரத்திற்கு ஜெமினி சரியாகப் பொருந்துவார் எனவே அவரிடம் கேட்டுப் பாருங்கள் என்று கூறியிருக்கிறார்.
அதன்படி கே.எஸ்.ரவிக்குமார் ஜெமினிகணேசனை அணுக அவரும் டபுள் ஓ.கே சொல்லி அவ்வை சண்முகி உருவாகியிருக்கிறது. விசுவநாத ஐயராக ஜெமினி ஏற்று நடித்த கதாபாத்திரம் அப்போது பெரிய வரவேற்பினைப் பெற்றது. வயது ஆனாலும் அதே இளமைக் குறும்புடன் ஜெமினி இதிலும் காதல் மன்னனாக வலம் வருவார்.