அடுத்த மூக்குத்தி அம்மனாக தரிசனம் காட்ட போகும் திரிஷா…சாமி ஹீரோயினுக்கே சாமி கெட்டப்-ஆ?

ரேடியோவில் ஆர்.ஜே.வாகப் பணிபுரிந்து தீயா வேலை செய்யணும் குமாரு படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் தான் ஆர்.ஜே. பாலாஜி. இன்று அவர் இருக்கும் உச்சம் அவரது சீரிய உழைப்பினால் வந்தது. ஆர்.ஜே.வாக, நடிகராக, கிரிக்கெட் வர்ணனையாளராக எனப் பல அவதாரங்கள் எடுத்தவர் எல்.கே.ஜி படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார்.

அதனைத் தொடர்ந்து மூக்குத்தி அம்மன் படம் மூலம் இயக்குநராகவும் களம் கண்டவர் அந்தப் படத்தினை வெற்றிப் படமாக்கினார். வழக்கமான கலகல ஆர்.ஜே.பாலாஜி ஸ்டைலில் உருவான மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் அம்மனாக நயன்தாரா நடித்திருந்தார்.

நயன்தாரா ஏற்கனவே சீதையாக ராமராஜ்ஜியம் படத்தில் பாலகிருஷ்ணாவுடன் நடித்திருந்தார். இதனால் அம்மன் வேடத்திற்குப் பொருத்தமாக இருப்பார் என மூக்குத்தி அம்மனில் நடிக்க வைத்தார் ஆர்.ஜே.பாலாஜி. படம் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது. வெற்றியும் பெற்றது. இதனைத் தொடர்ந்து 2022-ல் சத்யராஜ், ஊர்வசியுடன் சேர்ந்து நடித்து வீட்ல விஷேசம் படத்தினை இயக்கினார். இந்தப் படமும் பாராட்டைப் பெற்றது. சமீபத்தில் சிங்கப்பூர் சலூன் திரைப்படத்திலும் ஹீரோவாக நடித்தார்.

ரஜினியை விட எனக்கு அதிகமா சம்பளம் கொடுங்க.. தமிழ் ஹீரோக்களில் முதன் முதலாக 1 கோடி சம்பளத்தைத் தொட்ட ராஜ்கிரண்

இந்நிலையில் ஆர்.ஜே.பாலாஜி தான் இயக்கிய மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் பார்ட்-2 எடுக்கும் பணிகளில் இறங்கியுள்ளார். இந்த முறை அவர் தேர்வு செய்தது நயன்தாராவை அல்ல. அதற்குப் பதிலாக திரிஷாவைத் தேர்வு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே அரண்மனை-2 திரைப்படத்தில் பேயாக நடித்து ரசிகர்களைப் பயமுறுத்திய திரிஷா இந்தப் படத்தில் அம்மன் அவதாரம் எடுக்க உள்ளதாகத் தெரிகிறது.

மூக்குத்தி அம்மன் முதல் பாகத்தில் நயன்தாரா அம்மனாக வரும் காட்சிகளை ஹியூமருடன் மிகவும் அழகாகச் சொல்லியிருப்பார் ஆர்.ஜே.பாலாஜி. மேலும் முதலில் அருந்ததியாக மிரட்டிய அனுஷ்காவைத் தான் இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க அணுகியிருந்தார் ஆர்.ஜே.பாலாஜி. ஆனால் அந்த தருணத்தில் கோவிட் லாக்டவுன் காரணமாக அவரால் நடிக்க இயலவில்லை. தற்போது பார்ட்-2வில் திரிஷாவின் அம்மன் அவதாரம் எடுபடுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...