விடாபிடியாக கூடையை விடாத இயக்குநர்..கூட மேல கூட வச்சு கூடலூரு போறவளே . பாட்டுக்கு பின்னால இப்படி ஒரு சுவாரஸ்ய நிகழ்வா..!

By John A

Published:

விஜய் சேதுபதி, இனிகோ பிரபாகர், ஐஸ்வர்யா ராஜேஷ், காயத்திரி நடிப்பில் 2014-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்தான் ரம்மி. ஆணவக் கொலையை மிக ஆழமாகப் பதிவு செய்த திரைப்படம். இப்படத்தில் பாடல்கள் பெரிதும் இரசிகர்களைக் கவர்ந்தன. குறிப்பாக கூட மேல கூட வச்சு கூடலூரு போறவளே.. என்ற மெலடிப் பாடல் இன்றும் ரிங்டோனாகவும், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களிலும் காதலர்களிடையே வலம் வருகிறது. இந்தப் படத்தினை இயக்கியவர் பாலகிருஷ்ணன். இமான் இசைமையத்திருந்தார்.

இந்தப் பாடலை எழுதியவர் யுகபாரதி. இந்தப் பாடலை எழுதும் முன் இயக்குநரிடம் காட்சிக்கான சுச்சிவேஷனைக் கேட்டிருக்கிறார் யுகபாரதி. அப்போது இயக்குநர் காதல் பாடல் தான் அக்கா சைக்கிள் ஓட்ட பின்னால் தங்கை கூடையில் பூக்களைக் கொண்டு செல்கிறாள் இதுதான் சுச்சிவேஷன் என்று கூறியிருக்கிறார். யுகபாரதிக்கு இது புலப்படவில்லை. அக்கா தங்கை செல்லும் காட்சியில் காதலுக்கு இடம் ஏது என்று புரியாமல் மீண்டும் எப்படி பாடல் வேண்டும் என்று கூற, மறுபடியும் இயக்குநர் அதையே கூறியிருக்கிறார்.

திட்டிய பாரதிராஜா… ஷுட்டிங் ஸ்பாட்டில் லெட்டர் எழுதிவிட்டு எஸ்கேப் ஆன பாக்யராஜ்.. அதன்பின் நடந்த பாசப் போராட்டம்

அதன்பின் தெளிவாகக் கேட்கும் போது இயக்குநரின் வாழ்வில் நடந்த நிஜ சம்பவம்தான் அந்த கூடையில் பூ விற்கும் பெண். அப்பெண் மீது காதல் வயப்பட்டதை இமானிடமும், யுகபாரதியிடமும் கூறுவதற்காக வெட்கப்பட்டு அதை மறைத்து மறைத்துக் கூறியிருக்கிறார். அதன்பின் அவர்களே கேட்க ஒப்புக் கொண்டார். அப்படி உருவானது தான் கூட மேல கூட வச்சு கூடலூரு போறவளே பாடல். இந்தப் பாடலை பிரசன்னா மற்றும் வந்தனா ஆகிய பாடகர்கள் பாடியிருப்பர்.

இதே படத்தில் இடம்பெற்ற அடியே என்ன ராகம் நீயும் பாடுற பாடலும் சூப்பர் ஹிட் மெலடிப் பாடலாக விளங்கியது. இந்தப் படம் வெளியான போது கிடைக்காத வரவேற்பு சில நாட்களுக்குப்பின் கிடைக்க படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. விஜய் சேதுபதிக்கு இந்தப் படமும் ஓர் முக்கிய திருப்புமுனையைக் கொடுத்தது. இந்தப் படம் ஒரு காலமுறைப் படமாக 1987களில் கதை நடப்பதாக சித்தரிக்கப்பட்டிருக்கும்.