திட்டிய பாரதிராஜா… ஷுட்டிங் ஸ்பாட்டில் லெட்டர் எழுதிவிட்டு எஸ்கேப் ஆன பாக்யராஜ்.. அதன்பின் நடந்த பாசப் போராட்டம்

இயக்குநர் இமயம் பாரதிராஜா தனது முதல் படமான 16 வயதினிலே படத்தினை இயக்கும் வாய்ப்பினைப் பெற்றபோது அவரிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்தவர் பாக்யராஜ். இருவருக்கும் ஒரு நல்ல புரிதல் இருந்தது. பாரதிராஜா மனதில் என்ன நினைக்கிறாரோ அதை காட்சி வடிவில் கொண்டு வருவது பாக்யராஜ் தான். பாரதிராஜவுடன் இணைந்து 5,6 படங்களில் உதவிஇயக்குநராகப் பணியாற்றினார் பாக்யராஜ்.

ஒரு டயலாக் இல்லை.. நடிப்பு இல்லை.. மிக்சர் தின்றே ஹிட்டான நாட்டாமை மிக்சர் மாமா.. கே.எஸ்.ரவிக்குமார் உருவாக்கிய சீக்ரெட்

ஒருமுறை முதல் முதலில் 16 வயதினிலே திரைப்படத்தினை எடுக்கும் போது அன்று ஏதோ தயாரிப்பு தரப்பிலிருந்து சரிவர பணிகள் நடைபெறாததால் அவர்கள்மேல் இருந்த கடுப்பில் பாக்யராஜை திட்டியிருக்கிறார் பாரதிராஜா. இதனால் பாக்யராஜ் மனம் உடைந்து போனாராம். நாம் எந்தத் தவறும் செய்யவில்லையே எதற்காக திட்டினார் என்று தெரியாமல் இனி உங்களுடன் பணியாற்றப் போவதில்லை என்று ஒரு லெட்டரை எழுதிவிட்டு சென்றிருக்கிறார் பாக்யராஜ்.

அப்போது ஷுட்டிங் நேரத்தில் பாக்யராஜைத் தேட அவர் இல்லை எனத் தெரிய பதறிப்போய் பாக்யராஜை அவரது ரூமில் தேடிப் போய் அழைத்து வந்திருக்கின்றனர். அப்போது இருவரும் சமாதானம் ஆகினர். இதன்பின் அடுத்த படமான கிழக்கே போகும் ரயில் ஷுட்டிங் சுமூகமாக நடைபெற்றிருக்கிறது.

ஆனால் பாரதிராஜா இயக்கிய மூன்றாவது படத்திலும் இதே போல ஒரு சம்பவம் நடைபெற்றிருக்கிறது. இரண்டு படங்களை முடித்த பின் சில காலம் சொந்த ஊரில் இருந்த பாக்யராஜை மீண்டும் சிவப்பு ரோஜாக்கள் படத்தில் பணியாற்ற அழைத்திருக்கிறார் பாரதிராஜா.

நேராக சென்னைக்கு வந்தவருக்கு ஒரே ஷாக். அங்கு உதவி இயக்குநராக பழம்பெரும் இயக்குநர் ஜம்புவின் மகன் ராமு பாரதிராஜாவுடன் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அதன்பின் ஒருமுறை ஷுட்டிங்கின் போது பாரதிராஜா ராமு என அவரை அழைக்க பாக்யராஜுக்குக் கண்ணீர் வந்திருக்கிறது.

பாரதிராஜாவின் நிழலாக நான் இருந்தேன் இன்று என்னை விட்டு அவரை அழைக்கிறாரே என்ற வருத்தத்தில் மீண்டும் சொல்லாமல் கொள்ளாமல் அதேபோன்று லெட்டர் எழுதி வைத்து பாக்யராஜ் சென்றிருக்கிறார்.

அதன்பின் பாக்யராஜைத் தேட அப்போது ஆளில்லை. லெட்டர் மட்டும்தான் இருந்தது. இதன்பின் மீண்டும் அவரைத் தேடிப் போய் சமாதானம் செய்து அழைத்து வந்திருக்கின்றனர். இருவரும் நேருக்கு நேர் பார்த்த போது ஒருவரை ஒருவர் மாறி மாறி குறை கூற ஒருகட்டத்தில் இருவருக்கும் அழுகையே வந்திருக்கிறது.

அந்த அளவிற்கு குரு சிஷ்யன் பாசம் இருவருக்குள்ளும் மேலோங்கி இருந்திருக்கிறது. இன்றும் பாக்யராஜ் எங்க டைரக்டர் என்று பாரதிராஜாவை பெயரே சொல்லாமல் தான் அழைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...