வாலி, குஷி படங்களுக்குப் பின் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா 2004-ம் ஆண்டில் அவரே தயாரித்து, இயக்கி, நடித்த படம் தான் நியூ. சினிமாவிற்கு நடிகராகும் ஆசையில் வந்த எஸ்.ஜே.சூர்யா இயக்குநர் வஸந்திடம் உதவியாளராகச் சேர்ந்து அங்கே சினிமா கற்றுக் கொண்டு பின்னர் சில படங்களில் தலை காட்டினார்.
எனினும் இயக்குநர் முயற்சி செய்யலாம் என எண்ணி வாலி படக் கதையை எழுதி இயக்கினார். இப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. இதன்பின் குஷி படத்தினையும் இயக்க அஜீத், விஜய் ஆகிய இருவருக்கும் அடுத்தடுத்த படங்களில் பெரிய வெற்றியைக் கொடுத்தார்.
எனினும் அவருக்குள் இருந்த ஹீரோ ஆசை அவ்வப்போது எட்டிப்பார்க்க இறுதியில் அது முழுவதுமாக நியூ படத்தில் வெளிவந்தது. இந்தப் படத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் உள்ளதாக சர்ச்சை எழுந்தது. ஆனால் அதையெல்லாம் படத்தினுடைய இசை மாற்றி விட்டது. குறிப்பாக ஒரு பாடல் ஒட்டுமொத்த படத்தினையும் ஹிட் ஆக்கியது.
அந்தப் பாடல்தான் காலையில் தினமும் கண்விழித்தால் நான் கைதொழும் தேவதை அம்மா.. என்ற பாடல். அதற்கு முன் அம்மா பாடல் என்றாலே மன்னன் படத்தில் இடம்பெற்ற அம்மா என்றழைக்காத பாடலே எங்கும் ஒலிபரப்பானது. இந்தப் பாடலும் வாலியின் வரிகளில் உருவானவையே..
ராமராஜன்.. பெயருக்கும், உடுத்தும் ஆடைக்கும் பின்னால இப்படி ஒரு ரகசியமா?
அதன்பின் இந்தப் பாடல் ஹிட் ஆனது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், வாலியின் வரிகளில், உன்னிகிருஷ்ணன், சாதனா சர்கம் இப்பாடலைப் பாடியிருப்பர். இப்பாடலில் முதலில் எழுதிய வரியானது காலையில் தினமும் கண்விழித்தால் நான் கை தொழும் தெய்வம் அம்மா.. என்று வாலி எழுதியிருந்தாராம். அப்போது தெய்வம் என்ற வார்த்தை வேண்டாம் ஏனென்றால் இறைவன் ஒருவனே. எனவே அந்த வார்த்தைக்குப் பதிலாக தேவதை என்ற வார்த்தையைச் சேர்த்து பாடலை கம்போஸிங் செய்திருக்கிறார்கள்.
இந்தப் பாடல் சூப்பர் ஹிட் ஆனது. மேலும் படத்தில் முதன் முதலாக பழைய பாடல் ஒன்றையும் ரீமேக் செய்தனர். அந்தப் பாடல்தான் தொட்டால் பூ மலரும்.. படகோட்டி படப் பாடலை ரீமேக் செய்து வெளியிட்டனர். இந்தப் பாடலும் ரீமேக்கில் ரசிக்கும்படியாக இருந்தது. நியூ திரைப்படம் இன்றுவரை எந்தத் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எஸ்.ஜே.சூர்யா சாட்டிலைட் உரிமையை யாருக்கும் கொடுக்கவில்லையாம்.