ராமராஜன்.. பெயருக்கும், உடுத்தும் ஆடைக்கும் பின்னால இப்படி ஒரு ரகசியமா?

மக்கள் நாயகன் என்ற அடைமொழியுடன் 1980-களின் இறுதியில் தமிழ் சினிமாவையே ஒரு கலக்கு கலக்கியவர் தான் ராமராஜன். எங்க ஊரு பாட்டுக்காரன், ஊரு விட்டு ஊரு வந்து, கரகாட்டக்காரன் போன்ற மிகப்பெரிய ஹிட் படங்கள் அப்போதைய முன்னனி நடிகர்களையே ஆட்டம் காண வைத்தன. ஆனால் அதன்பின் அரசியல் பக்கம் நுழைந்து 2000 ஆண்டிற்குப் பின் சினிமாவை விட்டு ஒதுங்கினார் ராமராஜன். பல வருட இடைவெளிக்குப் பின் மீண்டும் சாமானியன் படம் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்திருக்கிறார்.

சாதாரணமாக ராமராஜன் என்றவுடன் நினைவுக்கு வருவது அவர் பாடல்களும், உடுத்தும் உடைகளும் தான். குமரேசன் என்ற இயற்பெயர் கொண்ட ராமராஜன் தனது பெயரை எப்படி மாற்றினார் தெரியுமா? இவரது பூர்வீகம் ராமநாதபுரம் ஜில்லா, இவரது தந்தை பெயர் ராமையா, இவருக்குப் பிடித்த தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன், இவர் முதன் முதலில் உதவியாளராகச் சேர்ந்த இயக்குநர் ராம.நாராயணன். இப்படி இவர் வாழ்வில் அனைத்துமே இராமர் என்ற பெயருடன் மிகவும் பொருந்திப் போயிருக்கிறது. எனவே ராம என்பதைத் தேர்ந்தெடுத்தார்.

இந்தப் படமெல்லாம் சரத்குமாருக்கு வந்த வாய்ப்பா..? ஷங்கர் முதல் லிங்குசாமி வரை அறிமுகப்படுத்திய தருணம்..

அதன்பின் சினிமாவில் இவர் வியந்த இளையராஜா, பாரதிராஜா ஆகியாரது பெயரின் பின்னால் உள்ள ராஜா என்பதை எடுத்து ராமராஜன் என்று தனக்குத் தானே குமரேசன் என்ற பெயரை மாற்றி ராமராஜனாக மாற்றினார். இப்படித்தான் இவரது பெயர் வந்தது. இதற்கு அடுத்ததாக இவர் உடுத்தும் உடைகள். எந்தப் படமாக இருந்தாலும் ஜிகு ஜிகு கண்ணைப் பறிக்கும் வண்ணங்களில் சட்டை உடுத்தி நடிப்பது வழக்கம். இந்தப் பழக்கம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரிடமிருந்து வந்ததாகும்.

இதய வீணை படத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் பாடலான காஷ்மீர்.. பியூட்டிபுல் காஷ்மீர் என்ற பாடலில் மஞ்சள் நிறத்தில் ஆடை உடுத்தியிருப்பார். திரையில் எத்தனைபேர் இருந்தாலும் அவர் மட்டுமே முக்கியமாகத் தெரிவார். அதேபோல்தான் நாமும் உடுத்த வேண்டும் என்று சட்டைகள் உடுத்த ஆரம்பித்தது பின்னர் அதுவே அவரது அடையாளமாகிப் போனது. மேலும் இராமராஜனை இன்றுவரை அடையாளப் படுத்துவது இளையராஜாவின் இசையில் அமைந்த பாடல்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...