மறுபடியும் படத்தில் இவரைத் தவிர வேறு யாராலும் சிறப்பாக நடித்திருக்க முடியாது…வெற்றிமாறன் பாராட்டு…

By Meena

Published:

வெற்றிமாறன் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகங்களைக் கொண்டவர். 2007 ஆம் ஆண்டு தனுஷ் நடித்த ‘பொல்லாதவன்’ திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.

2011 ஆம் ஆண்டு ‘ஆடுகளம்’ திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படம் மாபெரும் வெற்றிப் பெற்று தேசிய விருதுகளை வென்றது. 2016 ஆம் ஆண்டு இவர் இயக்கிய ‘விசாரணை’ திரைப்படம் அகாடமி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கிய ‘அசுரன்’ திரைப்படம் சிறந்த திரைப்படத்திக்கான தேசிய விருதை வென்றது.

அடுத்தடுத்து வெற்றித் திரைப்படங்களைக் இயக்கி அனைவரின் கவனத்தை ஈர்த்தார் வெற்றிமாறன். 2015 ஆம் ஆண்டு இவர் இயக்கிய ‘காக்கா முட்டை’ திரைப்படம் மாபெரும் வெற்றிப் பெற்று பல்வேறு விருதுகளை வென்று குவித்தது குறிப்பிடத்தக்கது. 2023 ஆம் ஆண்டு சூரியை நடிகராக ‘விடுதலை’ படத்தில் நடிக்க வைத்து அறிமுக படுத்தினர். இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது.

தற்போது, வெற்றிமாறன் அவர்கள் ‘மறுபடியும்’ திரைப்படம் பற்றியும் அதில் நடித்த நிழல்கள் ரவி பற்றியும் பேசியுள்ளார். 1993 ஆம் ஆண்டு பாலுமகேந்திரா எழுதி, ஒளிப்பதிவு செய்து இயக்கிய திரைப்படம் தான் ‘மறுபடியும்’. இத்திரைப்படத்தில் நிழல்கள் ரவி, ரேவதி, அரவிந்த், ரோகினி ஆகியோர் நடித்துள்ளனர். திருமண பந்தத்தில் கணவன் வேறொரு பெண்ணை தேடி செல்லும் பட்சத்தில் அந்த மனைவியின் வாழ்க்கை என்னவாகும் என்பதை பற்றிய கதைதான் ‘மறுபடியும்’.

நிழல்கள் ரவி நடிகராக இருந்து பின் குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். வெற்றிமாறன் நிழல்கள் ரவி பற்றி கூறியது என்னவென்றால், ‘மறுபடியும்’ படத்தில் பாலுமகேந்திரா நிழல்கள் ரவியை வைத்து என்ன படம் எடுப்பார் என்று தோன்றியது. ஆனால் படம் பார்த்த பின்பு தான் இவரை விட அந்த கதாபாத்திரத்தில் வேறு யாராலும் சிறப்பாக நடிக்க முடியாது என்று தோன்றியது என நிழல்கள் ரவியை புகழ்ந்து பேசியுள்ளார் வெற்றிமாறன்.