நடிகர் சரவணனின் மைனஸையே பிளஸ்ஸாக மாற்றி நடிக்க வைத்த அமீர்.. பருத்திவீரன் சித்தப்புவாக கலக்கியது இப்படித்தான்..

By John A

Published:

தமிழ்சினிமாவின் மிகச்சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக விளங்குகிறது பருத்தி வீரன் படம். தனது முதல் படமான மௌனம் பேசியதே திரைப்படத்தில் அண்ணன் சூர்யாவுக்கு அமைதியான நடிப்பைக் கொடுத்த அமீர். அடுத்த படத்தல் தம்பி கார்த்தியை செம்மண் காட்டிலும், புழுதியிலும் புரள வைத்து ரணகளப்படுத்தி நடிப்பை வாங்கியிருப்பார். கார்த்திக்கு இந்தப் படம் முதல் படம் என்றே தெரியாது. ஒரு கைதேர்ந்த நடிகர் போன்று பருத்தி வீரனில் கலக்கியிருப்பார்.

இந்தப் படத்தில் நடித்த அத்தனை கதாபாத்திரங்களும் இன்றும் நம் மனதை விட்டு நீங்காதவை. அப்படி ஒரு கதாபாத்திரம் தான் சரவணன் நடித்த சித்தப்பு கதாபாத்திரம். அதற்கு முன்னர் 20 படங்களுக்கு மேல் ஹீரோவாக நடித்த சரவணணுக்கு எந்தப் படமும் ஓடவில்லை. பார்ப்பதற்கு விஜயகாந்த் சாயலில் இருந்ததாலும் அதுவும் ஒர்க்அவுட் ஆகவில்லை. இந்நிலையில் இயக்குநர் பாலா நந்தா படத்தில் சரவணனுக்கு ராஜ்கிரனின் மகனாக கம்பேக் கொடுத்தார்.

நந்தா படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றிய அமீர் அதன்பின் பருத்திவீரன் படத்தில் சரவணனை செவ்வாழை கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். இந்தப் படத்தில் நடித்த பிறகுதான் சரவணணுக்கு சினிமாவில் சிறப்பான எதிர்காலமே கிடைத்தது. தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

செல்வராகவனின் மாஸ்டர் பீஸ் படமான 7G படத்தில் இத்தனை ஹீரோக்கள் நடிக்க இருந்ததா?

இப்படி இவருக்கு கம்பேக் கொடுத்த திரைப்படமான பருத்தி வீரன் படம் நடிக்கும் போது மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்திருக்கிறார். இதனால் சரிவர படப்பிடிப்பில் கவனம் செலுத்த முடியா நிலை இருக்க, இதனை அறிந்த அமீர் அவரின் இந்த மைனஸையே பிளஸ்ஸாக மாற்றியிருக்கிறார். எப்படி எனில் சரவணன் நடிக்கும் போது அடிக்கடி மூட்டில் கையை வைத்து தேய்த்துக் கொண்டே மசாஜ் செய்வது போன்ற மேனரிஸத்தை உருவாக்கி அதேபோன்று நடிக்க வைத்திருக்கிறார்.

இப்படித்தான் சித்தப்பு கதாபாத்திரத்தின் மேனரிஸங்கள் வடிவமைக்கப்பட்டது. மேலும் அமீர் தான் இயக்கும் படங்களில் சற்று கறாராகவே நடந்து கொள்வாராம். உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளின் கோபம், மகிழ்ச்சி, பொறுமை எந்த அளவு உள்ளது என எடைபார்த்து அதற்கேற்றவாறு பாத்திரங்களை வடிவமைப்பது அமீரின் வழக்கமும் கூட.