செல்வராகவனின் மாஸ்டர் பீஸ் படமான 7G படத்தில் இத்தனை ஹீரோக்கள் நடிக்க இருந்ததா?

தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை படத்தில் தனது தந்தை கஸ்தூரிராஜா மூலம் சினிமாவின் அத்தனை இலக்கணங்களையும் கற்றுக் கொண்டு கிட்டத்தட்ட முழு இயக்குநர் பொறுப்பையும் தலையில் சுமந்து பணியாற்றினார் இயக்குநர் செல்வராகவன். அதன்பின் மீண்டும் தனது சகோதரர் தனுஷை வைத்து காதல் கொண்டேன் படத்தினை இயக்கி தமிழ் சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தார். இதனையடுத்து மீண்டும் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம்தான் 7G ரெயின்போ காலனி.

யுவன் சங்கர்ராஜா இசையில், நா.முத்துக்குமாரின் வரிகளில், அர்விந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் சென்றடைந்தது. அப்பா மகன் உறவு, நண்பர்கள், அழுத்தமான காதல் என அனைத்து ஏரியாவிலும் 7G ரெயின்போ காலனி குறையே இல்லாமல் இருந்தது. இப்படத்தில் ரவிகிருஷ்ணா, சோனியா அகர்வால் ஆகியோர் நடித்திருப்பர்.

தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு ஸ்கிரிப்ட் எழுதி முடித்து இயக்குநர் செல்வராகவன் ஹீரோவாக முதலில் தேர்வு செய்தது சூர்யாவைத் தானாம். ஆனால் அப்போது பிதாமகன், காக்க காக்க படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால் சூர்யாவின் தேதி கிடைக்கவில்லை. இதனையடுத்து மாதவனை அனுகியிருக்கின்றனர். மாதவனும் பிரியமானதோழி படப்பிடிப்பில் பிஸியாக இருந்திருக்கிறார். இந்நிலையில் ஏ.எம்.ரத்னம் யாரை ஹீரோவாகப் போடலாம் என செல்வராகவனுடன் விவாதம் நடத்திய போது புதுமுகம் ஒருவரை நடிக்க வைக்கலாம் என முடிவு செய்தனர்.

தளபதி படத்துல இப்படி ஒரு கோர்ட் வேர்டா.. யாரெல்லாம் இத கவனிச்சிருக்கீங்க..

அப்போது வெளிநாட்டில் படித்து முடித்து தாயகம் திரும்பிய ஏ.எம்.ரத்னத்தின் மகனான ரவிகிருஷ்ணா ஹீரோவாக்கலாம் என எண்ணியிருக்கிறார் செல்வராகவன். ஆனால் அப்போது ரவிகிருஷ்ணா உடல் பருமனாக இருந்ததால் உடல் எடையைச் சற்று குறைத்து வரச் சொல்லியிருக்கிறார். அதன்பின் உடல் எடையைக் குறைத்து ரவிகிருஷ்ணா வர போட்டோ ஷுட் போகலாம் எனக் கூறியிருக்கிறார் செல்வராகவன். இப்படித்தான் 7G ரெயின்போ காலனி படத்தில் அறிமுகமானார்.

அதன்பின் சோனியா அகர்வாலுக்குப் பதிலாக முதலில் நடித்தவர் சுப்ரமணியபுரம் சுவாதி. கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு மேல் ஷுட்டிங் நடந்த நிலையில் அவர் அப்போது மருத்துவம் படித்துக் கொண்டிருந்ததால் அவரால் மேற்கொண்டு நடிக்க முடியவில்லை. இதனையடுத்து அவர் படத்திலிருந்து விலக சோனியா அகர்வால் பின் இணைந்தார்.

படம் வெளியாகி 150 நாட்களுக்கும் மேல் ஓடியது. குறிப்பாக பாடல்கள் மனதைத் துளைத்தன. செல்வராகவனின் மாஸ்டர் பீஸ் படங்களில் ஒன்றாக 7G ரெயின்போ காலனி விளங்குகிறது என்றால் ஆச்சர்யமில்லை.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...