அறிவு வரம் பெற்ற வில்லன்.. அந்த அறிவால் அவனை வீழ்த்தத் துடிக்கும் ஹீரோ.. தனி ஒருவன் படத்துக்கு மூல காரணமான ஹிரண்ய வதம்

By John A

Published:

தமிழ் சினிமாவில் 2015-ம் வருடத்தில் வெளியான ஓர் முக்கிய திரைப்படம்தான் தனி ஒருவன். ஜெயம் ரவி, அர்விந்த்சாமி, நயன்தாரா நடிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான தனி ஒருவன் 2015-ம் ஆண்டில் வெளியான படங்களில் அதிக வசூல் செய்த திரைப்படமாக இருந்தது. அதுவரை ஹீரோவாக நடித்து இளம்பெண்கள் மனதைக் கொள்ளை கொண்ட அர்விந்தசாமி இந்தப் படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாக நடித்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார். படத்தில் ஜெயம்ரவியைக் காட்டிலும் அர்விந்த்சாமி தான் முதல் ஹீரோ போன்று ஜொலிப்பார்.

படத்தின் ஒவ்வொரு பிரேமையும் இயக்குநர் மோகன் ராஜா செதுக்கியிருப்பார். இந்தப் படத்தின் கதையை உருவாக்கிய தருணத்தில் இயக்குநர் மோகன் ராஜா தனது தந்தை எடிட்டர் மோகனிடம் கூறியிருக்கிறார். படத்தின் கதையை இன்ச் பை இன்ச் ஆக ராஜா கூற அப்போதுதான் இது இந்தக்கதை புராணங்களில் கூறப்படும் ஹிரண்ய வதம் என்று அறிந்திருக்கிறார்.

ஹிரண்யவதம் என்பது புராணங்களில் கூறப்படுவது போல எதிரிகள், இயற்கை உள்ளிட்டவற்றால் வெல்ல முடியாது, சாகா வரம் பெற்ற ஒருவனை எவ்வாறு இறைவனே மனித அவதாரம் எடுத்து அழிக்கிறார் என்பது தான் இந்த வதத்தின் சாராம்சம்.

பிரபுவுக்கு கூட சொல்லாத அறிவுரையை பிரசாந்துக்கு கூறிய நடிகர் திலகம்… இன்று வரை கடைப்பிடிக்கும் டாப் ஸ்டார்

தனி ஒருவன் படக்கதையும் இதனையே மையக் கருத்தாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் சித்தார்த் அபிமன்யு என்ற அதிக அறிவு பெற்ற மிகப்பெரிய கார்ப்பரேட் வில்லனை மித்ரன் ஐபிஎஸ் எவ்வாறு அவனை அவனது அறிவாலேயே வீழ்த்துகிறார் என்பதுதான் கதை. பரபரப்பு திரைக்கதையுடன், விறுவிறு திருப்பங்கள், டிவிஸ்ட்களுடன் ஒரு சூப்பர் குட் படத்தினை எடுத்து அதில் பெரிய வெற்றியும் கொடுத்தார் மோகன் ராஜா. இப்படித்தான் தனி ஒருவன் படம் உருவாகியிருக்கிறது.

யதார்த்தமான தந்தையாக தம்பி ராமையா அவரை நகர்த்தி அரசியலில் கார்ப்பரேட்டை புகுத்தி அசர வைக்கும் அர்விந்த்சாமி, குற்றங்களைக் கண்டுபிடிக்கும் ஜெயம் ரவி என படத்தில் ஒரு ஹிரண்யவதத்தையே நடத்தியிருப்பார் மோகன் ராஜா. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஹிப் ஹாப் ஆதி இசையில் பாடல்களும் மிகப்பெரிய ஹிட் ஆகியது.