பிரபுவுக்கு கூட சொல்லாத அறிவுரையை பிரசாந்துக்கு கூறிய நடிகர் திலகம்… இன்று வரை கடைப்பிடிக்கும் டாப் ஸ்டார்

1995களில் விஜய், அஜீத் உள்ளிட்ட நடிகர்கள் வளர்ந்து வந்த வேளையில் அப்போதைய இளைஞர்களின் ஆஸ்தான நாயகனாக விளங்கியவர் டாப் ஸ்டார் பிரசாந்த். நடிகர் தியராகராஜனுக்கு தனக்கு இப்படி ஓர் மகன் இருப்பதே தெரியாமல் வளர்த்து லண்டனில் படிக்க வைத்துக் கொண்டிருந்தார். ஒருமுறை சத்யராஜ் தியாகராஜன் வீட்டிற்குச் செல்லும் போது அங்கு தியாராஜனைக் கேட்க இருங்க அங்கிள் அப்பாவைக் கூப்பிடுறேன் என்று கூறிய போது சத்யராஜுக்கு அதிர்ச்சி. தியாகராஜனுக்கு இப்படி ஓர் மகன் இருக்கிறாரா என்று.

அதன்பின் சத்யராஜ் அதனை சில இயக்குநர்களிடம் சொல்ல தியாகராஜன் வீட்டை இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் மொய்க்க ஆரம்பித்திருக்கின்றனர். அப்படி அவருக்கு முதல் படவாய்ப்பாக அமைந்ததுதான் வைகாசி பொறந்தாச்சு திரைப்படம். தன் முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் பாடல்களைக் கொண்டு அறிமுகமான பிரசாந்த் குறுகிய காலத்திலேயே முன்னனி நடிகராக மாறினார். அப்போது அவருக்கு உற்ற வழிகாட்டியாய் இருந்தவர் அவரது தந்தை தியாகராஜன்.

தன்னுடைய தந்தையின் வழிகாட்டுதலில் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்தார் பிரசாந்த். ஒருமுறை தியாராஜன் பிரசாந்தை நடிகர் திலகம் சிவாஜியின் வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கே பிரசாந்தை வாழ்த்திய சிவாஜி. அவருக்கு மூன்று அறிவுரைகளை வழங்கியிருக்கிறார். அப்போது சிவாஜி பிரசாந்துக்காக சொன்ன வார்த்தைகள் தான் இவை.

மனைவியின் தாலியை விற்று ரஜினியை ஹீரோவாக்கிய தயாரிப்பாளர்.. சூப்பர் ஸ்டாராக மாற்றிய வரலாறு

“நான் பிரபுவுக்குக் கூட இந்த அறிவுரைகளை சொன்னது கிடையாது. சினிமாவில் வந்துவிட்டாய். முதலில் 6 மணிக்கு ஷுட்டிங் என்றால் 5.30 மணிக்கெல்லாம் மேக்கப் உடன் போய் தயாராக இரு. அடுத்ததாக இயக்குரிடம் எதுவும் கேட்காதே. அவர்கள் சொல்கிறபடி நடித்துக் கொடுத்தால் போதும். ஏன் அப்படி இப்படி என்றெல்லாம் கேட்காதே. மூன்றாவதாக எந்த நடிகைகளுடனும் நெருங்கிப் பழகாதே.”

இந்த மூன்று அறிவுரைகளை நடிகர் திலகம் பிரசாந்துக்குக் கூறியிருக்கிறார். அதன்படி அன்று முதல் இன்று வரை எந்த ஒரு கிசுகிசுக்களிலும் சிக்காமல் இப்போதுள்ள உச்ச நடிகர்களுக்கு முன்னதாகவே வளர்ந்த நடிகராக இருந்த பிரசாந்த் 2010-ன் பிற்பகுதியில் சரிவைச் சந்திக்கத் தொடங்கினார். பொன்னர் சங்கர் படத்திற்குப் பின் அவருக்குப் பெரிய வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை. இருப்பினும் தற்போது தி கோட் படத்தில் விஜய்யுடன் பல வருட இடைவெளிக்குப் பிறகு நடித்து வருகிறார்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...