அஜீத்துக்காக இப்படி ஒரு பாட்டை எழுதச் சொன்ன இயக்குநர்.. பாடலில் ட்விஸ்ட் வைத்து எழுதிய பாடலாசிரியர்

By John A

Published:

ஒரு நடிகனுக்கு மூலதனமே அவருடைய உடலமைப்பு தான். தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திற்கும் உடலை வருத்தி விதவிதமாக ஹேர்ஸ்டைல் வைத்து, உடலை கட்டுமஸ்தாக வைத்தும், மெலிந்தும் கதைக்கு ஏற்றாற் போல் தங்களை செதுக்கிக் கொள்கின்றனர். அப்படி ஒவ்வொரு நொடியும் தானாக செதுக்கிக் கொண்ட நடிகர் தான் அஜீத்.

பைக் விபத்து, முதுகில் அறுவை சிகிச்சை, காயங்கள் என அனைத்தையும் கடந்து சினிமாவில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கு அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகளும், போராட்டங்களும் பல மடங்கு அதிகம். அதனால் தான் அனைத்தையும் தாண்டி இன்று சினிமா மட்டுமல்லாது ரசிகர்கள் மனதிலும் ஒரு ரோல்மாடலாக வலம் வருகிறார்.

2005-ம் ஆண்டுகளின் பிற்பகுதியில் அஜீத் தனது உடல் எடையைக் குறைப்பதில் தீவிர கவனம் காட்டி மளமளவென உடல் எடையைக் குறைத்தார். அந்தச் சமயத்தில் வெளியான படம் தான் பரமசிவன். இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் வெளியான பரமசிவன் படத்தில் அஜீத் வாலிபர் போல தோற்றமளித்திருப்பார். அப்போதுள்ள நடிகர், நடிகைகள் அனைத்தும் பொறாமைப்படும் அளவிற்கு தன்னுடைய உடல் எடையைக் குறைத்து ஆணழகான வலம் வந்தார். நம்ம அஜீத்தா இது என்று கேட்கும் அளவிற்கு அந்தப் படத்தில் அவருடைய தோற்றம் இருக்கும்.

பரமசிவன் படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது இயக்குநர் பி.வாசு அந்தப் படத்தில் அஜீத்தின் தோற்றத்தை வைத்து ஒரு பாடலை எழுதுமாறு கவிஞர் யுகபாரதியிடம் கேட்டிருக்கிறார். அப்போது யுகபாரதி பெண்கள் உடல் நலிவுற்று இருந்தால் அதனை பசலை நோய் என்போம்.

எம்.ஜி.ஆர் கற்றுக் கொடுத்த பழக்கம்.. ஏ.வி.எம். சரவணன் பகிர்ந்த மெய்சிலிர்க்கும் அனுபவம்

ஆனால் ஆண்கள் உடல் மெலிந்தால் அது பலவீனம் என்று சங்க இலக்கியத்தில் பொருள்படும் எனவே அவ்வாறு எழுதுவது அவருக்குப் பொருந்தாது என்று கூறியிருக்கிறார். ஆனால் பி.வாசு வேறு ஏதாவது வரிகளைப் போட்டு அவர் உடல் எடைக் குறைத்ததை எப்படியாவது பாட்டில் கொண்டு வாருங்கள் என்று கேட்க உருவான பாடல் தான் ஒரு கிளி காதலில்.. பாடல். காதல் பாடலில் எப்படி இதற்கான வரிகள் என்று கேட்கிறீர்களா?

இந்தப் பாடலில் கவிஞர் யுகபாரதி அஜீத் உடல் எடைக் குறைத்ததை பாட்டில் அழகாகச் சொல்லியிருப்பார். அதாவது காதலன் காதலியைக் காணாமல் தவிக்கும் போது உடல் வருந்து என்பது இயல்பானது. எனவே அதனை அஜீத்துக்காக ‘நான் காதலோடு தோழனான சேதி அறிவாயோ..’ என்ற வரிகளைப் போட்டு காதல் வயப்பட்ட அனைவருக்கும் உடல் இளைப்பது சாதாரணமானது என்பது ஒரு கிளி பாடலில் அழகாகச் சொல்லியிருப்பார் யுகபாரதி. வித்யாசாகர் இசையில் உருவான இந்தப் பாடலை மது பாலகிருஷ்ணன், சுஜாதா ஆகியோர் பாடியிருப்பர். இந்தப் பாடல் மெலடி ஹிட் பாடலாக மாறியது.

மேலும் இதே லுக்கில் அஜீத்தின் அடுத்தடுத்த படங்களான திருப்பதி, பில்லா போன்ற படங்கள் வெளிவந்தன.