எம்.ஜி.ஆர் கற்றுக் கொடுத்த பழக்கம்.. ஏ.வி.எம். சரவணன் பகிர்ந்த மெய்சிலிர்க்கும் அனுபவம்!

கொடுத்துக் கொடுத்து சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர் தான் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். இளமையில் வறுமை வாட்டிய போது மூன்று வேளை சாப்பாடு கிடைக்கும் என்பதற்காக நாடகக் கம்பெனியில் சேர்த்து விட்டார் அவரின் தாயார். அன்று சாப்பாட்டிற்கே வழியில்லாமல் இருந்த எம்.ஜி.ஆர். பின்னாளில் இளைமையில் பசிப்பிணியை யாரும் அனுபவிக்கக் கூடாது என்று பள்ளிகளில் காமராஜர் செயல்படுத்திய மதிய உணவுத் திட்டத்தினை சத்துணவுத் திட்டமாக மாற்றி வரலாற்றில் இடம்பிடித்தார்.

இப்படி பசியால் வாடியோருக்கும், ஏழ்மையில் வாடியோருக்கும் எண்ணற்ற உதவிகளைச் செய்துள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரிடமிருந்து சிறந்த பண்பு ஒன்றை அவரிடமிருந்து பழகியிருக்கிறார் ஏ.வி.எம் சரவணன். சினிமாவின் பல்கலைக்கழமாக விளங்கிய ஏ.வி.எம்.ஸ்டுடியோ ஒரு காலத்தில் பல ஆயிரம் பேருக்கு சோறு போட்ட ஒரு பெரிய தொழில் நிறுவனமாக விளங்கியது.

அப்பேற்பட்ட ஏ.வி.எம். தயாரிப்பில் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர்.நடித்த ஒரே படம் அது அன்போ வா. இப்படத்தின் ஷுட்டிங் அனைத்தும் பனிப்பிரதேசங்களில் நடைபெற்றது. ஒருமுறை அன்பே வா பட ஷுட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம். காலை 11 மணி வேளையில் சிற்றுண்டி அருந்தும் நேரம் வந்தது. அதனை சினிமா வட்டாரத்தில் குரங்கு டிபன் என்று அழைக்கப்படுவது வழக்கம். அச்சமயத்தில் அங்கிருந்த ஏ.வி.எம். சரவணனுக்கும் வழங்கப்பட்டது.

அள்ளிக் கொடுத்த ரஜினி.. படையப்பாவின் மாபெரும் வெற்றியால் பணியாற்றியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

அப்போது சிற்றுண்டியை சாப்பிட முயன்ற ஏ.வி.எம் சரவணனிடம் எம்.ஜி.ஆர், “இதை நீங்க உங்க ரூம்ல வச்சு சாப்பிடுங்க” என்றிருக்கிறார். ஏன் என்று பதிலுக்கு சரவணன் கேட்க, ஒரு “பொருளை எல்லாருக்கும் கொடுக்கனும்..இல்லைன்னா நீங்க தனியா சாப்பிடனும்” என்றிருக்கிறார் எம்.ஜி.ஆர். எல்லோருக்கும் கொடுத்தாச்சே என்று சரவணன் கூற, “இல்லை.. இதோ மேலே ஒரு லைட்மேன் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு இன்னும் ஏதும் கொடுக்கப்படவில்லை” என்று கூற, அன்று தான் கற்றுக் கொண்டாராம் ஏ.வி.எம் சரவணன். ஒருபொருளை அனைவருக்கும் கொடுத்துச் சாப்பிட வேண்டும் என்று.

தான் வெளியில் கிளம்பும் போது கூட, தனது கார் டிரைவரிடம் சாப்பிட்டாச்சா என்று கேட்டுவிட்டுத்தான் அவரை வண்டியை எடுக்கச் சொல்வாராம். இந்த நற்பண்புகளை எம்.ஜி.ஆரிடம் இருந்தே கற்றுக் கொண்டதாக பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார் ஏ.வி.எம்.சரவணன்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...