மும்பைக்கு அடுத்த இடத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் செஞ்ச சாதனை.. சிஎஸ்கே, ஆர்சிபி இல்லாத லிஸ்ட்..

By Ajith V

Published:

ஐபிஎல் வரலாற்றிலேயே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நிகராக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி எட்டிப் பிடித்துள்ள சாதனையை பற்றி தற்போது பார்க்கலாம். கடந்த சீசன் வரை ஐபிஎல் வரலாற்றிலேயே 250 க்கு மேற்பட்ட ரன்களே இரண்டு முறை தான் அடிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மூன்று முறை 250 ரன்களைக் கடந்ததுடன் மட்டுமில்லாமல் அதிகபட்ச ஸ்கோரான 287 ரன்களையும் சேர்த்திருந்தனர்.

இவர்களைப் போல கொல்கத்தா அணி 272 ரன்களையும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 262 ரன்களையும் எடுக்க மொத்தம் ஐந்து முறை இந்த சீசனில் 250க்கு மேற்பட்ட ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது. பதினாறு சீசன்களில் ஒரு சில முறை மட்டுமே தொடப்பட்ட விஷயம் இந்த சீசனில் சர்வ சாதாரணமாக ஐந்து முறை எடுக்கப்பட்டுள்ளது கிரிக்கெட் ரசிகர்களை ஒரு நிமிடம் மிரண்டு போகத்தான் வைத்துள்ளது.

முன்பெல்லாம் 180 முதல் 200 ரன்கள் குவித்தாலே அதனை சேசிங் செய்வதற்கு மிக மிக கடினமாக இருக்கும் அதே வேளையில் இந்த முறை 200 க்கும் மேற்பட்ட ரன்களை குவித்தாலே அதனை நோக்கி ஆடும் எதிரணியினர் மிக அசால்டாக சேஸ் செய்து விடுகின்றனர். முழுக்க முழுக்க பேட்டிங்கிற்கு மட்டுமே சாதகமாக இருக்கும் விஷயமாகவும் ஐபிஎல் பார்க்கப்பட்டு வரும் நிலையில் தான் சில முக்கியமான சாதனைகளையும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இந்த முறை படைத்துள்ளது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி எப்போதெல்லாம் 200 ரன்களுக்கு மேல் முதலில் பேட்டிங் செய்து குவித்துள்ளார்களோ அப்போதெல்லாம் அவர்கள் தோல்வியை சந்தித்தது கிடையாது. இந்த சீசனிலேயே ஒரு சில முறை முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் 200 ரன்களுக்கு மேல் குவித்திருந்த நிலையில் அதனை நோக்கி ஆடிய எதிரணியினர் இலக்கை எட்ட முடியாமல் தோல்வியைத் தான் தழுவியிருந்தனர்.

இதனால் அவர்களின் சாதனை பட்டியலில் இதன் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்க, மொத்தம் 13 முறை 200 ரன்களுக்கு மேல் முதலில் ஆடி குவித்துள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எந்த அணியும் சேசிங்கில் தோற்கடித்தது கிடையாது.

இந்த வரிசையில் அதிகபட்சமாக மும்பை இந்தியன்ஸ் அணி 14 முறை 200 ரன்களுக்கு மேல் குவித்து சேசிங்கில் கோட்டை விட்டது கிடையாது என்ற சிறப்பை பெற்றுள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி 13 முறையும் அதற்கடுத்த இடத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 2 முறையும் 200 ரன்களுக்கு மேல் குவித்தும் தோற்றுது கிடையாது என்ற சிறப்பை பெற்றுள்ளது.

ஐபிஎல் வரலாற்றிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு உள்ளிட்ட பலம் வாய்ந்த அணிகளாக திகழ்ந்தாலும் அவர்கள் 200 ரன்களுக்கு மேல் அடித்த போட்டியிலும் கூட பலமுறை தோல்வியை தான் சந்தித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.