சினிமா உலகின் திரைக்கதை மன்னனாக பாக்யராஜைக் கொண்டாடி வருகின்றனர் தமிழ் சினிமா ரசிகர்கள். சாதாரண கதையைக் கூட விறுவிறுப்புடன் நக்கல், நையாண்டி தனக்குரிய பாணியில் சொல்லி வெற்றி பெற வைப்பத்தில் அவருக்கு நிகர் அவரே. பெரும்பாலும் பாரதிராஜாவின் படங்களின் வெற்றிக்கு பாக்யராஜின் திரைக்கதையும் ஓர் மூல காரணமே.
பாரதிராஜாவிடம் அவரின் முதல்படமான 16 வயதினிலே படத்திலிருந்து பல படங்களில் அவரிடம் இணை இயக்குநராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் இருந்திருக்கிறார் பாக்யராஜ். இன்றும் பாரதிராஜா மேல் கொண்ட குரு மரியாதை காரணமாக பெயரைக் கூடச் சொல்லாமல் எங்க டைரக்டர் என்றுதான் அழைப்பார்.
பாக்யராஜ் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் போதே சில படங்களில் கெஸ்ட் ரோலிலும் நடித்தார்.அப்படி அவர் ரஜினியின் இரண்டு படங்களில் நடித்திருக்கிறார். அவைதான் நான் சிகப்பு மனிதன் மற்றும் அன்புள்ள ரஜினிகாந்த். அப்போது சினிமா உலகில் தொடர் வெற்றியைக் கொடுத்து முன்னனி இடத்திலிருந்த பாக்யராஜ் தனது இமேஜைப் பார்க்காமல் ரஜினிக்காக இந்த இந்த இரண்டு படங்களிலும் கெஸ்ட் ரோலில் நடித்தார்.
அது இதுன்னு பேசாலாமா? அப்போ அவ, இவன்னு பேசட்டுமா.. மீண்டும் பயில்வான் சர்ச்சைப் பேட்டி
அதன்பின் இருவரும் அவரவர் பாதையைத் தேர்ந்தெடுத்து படங்களைக் கொடுத்து வந்தனர். இந்நிலையில் கடந்த 1998-ல் பாக்யராஜ் தயாரித்து, இயக்கி நடித்த படமான வேட்டிய மடிச்சுக் கட்டு படம் ரிலீஸ் ஆனது. இந்தப் படத்தில் ரஜினி ஒரு காட்சியில் நடித்தால் படம் சூப்பர்ஹிட் ஆகும் வசூலும் நன்றாக இருக்கும் என நினைத்து அப்போது ரஜினியிடம் கேட்டுள்ளார் பாக்யராஜ்.
ஆனால் அப்போது இதை மறுத்திருக்கிறார் ரஜினி. தான் ரஜினி ஹீரோவாக நடித்த இரண்டு படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்ததை மனதில் வைத்து கேட்டவர் பின்னர் அதனை ரஜினி நிராகரிக்கவே அப்செட் ஆகியிருக்கிறார் பாக்யராஜ்.
அப்போது பாக்யராஜிடம் ரஜினிகாந்த், உங்களுக்கு இந்தப் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துக் கொடுத்தால் அடுத்தடுத்து நிறைய இதுபோன்று கேட்டு வருவார்கள். எனவேதான் வேண்டாம் என்று நிராகரித்தேன் என்று கூறியுள்ளார். ரஜினியின் இந்த பதில் பாக்யராஜுக்கும் சரி எனப்பட்டதால் அவர் மீதான தவறான எண்ணத்தை மாற்றிக் கொண்டார்.