பக்கத்து ரூமில் கேட்ட பயரங்கர பாட்டு சத்தம்.. தமிழ் சினிமாவின் அடுக்குமொழி நாயகன் டி.ராஜேந்தர் அடியெடுத்து வைத்த வரலாறு!

By John A

Published:

அது 1980 வருடம். அதுவரை காதல் படங்கள் என்றாலே இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற அத்தனை இலக்கணங்களையும் உடைத்து காதல் தோல்வியை மையப்படுத்தி ஒரு படம் உருவாகிறது அதுதான் ஒருதலை ராகம். ஒருதலையாகக் காதலித்து மனதிற்குள் காதலைப் பூட்டிவைத்து எப்போது சொல்வார்கள், எப்போது சேர்வார்கள் என்று ரசிகர்களை ஏங்க வைத்த படம். படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. படத்தின் வெற்றிக்குக் காரணம் டி.ராஜேந்தர் என்ற மாயவரத்து அடுக்குமொழி நாயகன்.

சினிமாவில் ஒருவர் நடிக்கலாம், தயாரிக்கலாம், இசையமைக்கலாம். ஆனால் நடிப்பு, இயக்கம், இசை, பாடல்கள், திரைக்கதை, தயாரிப்பு, வசனம் என அனைத்தும் சேர்ந்த கலவையாய் சென்னைக்கு வந்து வெற்றி மகுடம் சூட்டியவர் டி.ராஜேந்தர்.

இரட்டை இயக்குநர்கள் ராபர்ட், ராஜசேகர் ஆகியோர் சென்னை தி.நகர் பஸ் நிலையம் அருகில் சினிமா வாய்ப்புத் தேடி அங்கு ஒரு மேன்சனில் தங்கியிருக்கின்றனர். அப்போது அவர்களைத் தேடி நடிகர் வாகை சந்திர சேகர் வந்திருக்கிறார். அந்த நேரத்தில் அவர்களின் பக்கத்து அறையில் டமார்.. டமார்.. என சப்தம் கேட்டிருக்கிறது.

KPY பாலாவுக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வருது? உண்மையைப் போட்டுடைத்த சினிமா பத்திரிகையாளர்

என்னவென்று சந்திரசேகர் விசாரிக்க சினிமா சான்ஸ் தேடி மாயவரத்தில் இருந்து ஒருவர் வந்துள்ளார் என்று கூறியதும் சந்திரசேகர் ஒரு ஐடியாவைக் கொடுத்திருக்கிறார். நாம் அனைவரும் சேர்ந்து ஒரு படம் பண்ணலாமே என்று யோசனை தெரிவிக்க உருவானது தான் ஒருதலை ராகம்.

அப்போது டி.ராஜேந்தரிடமும் இதுபற்றிக் கூற உடனே அவரும் ஓ.கே.சொல்ல மளமளவென கதை தயாராகிறது. வசனம், பாடல்கள், இசை பொறுப்பினை டி.ராஜேந்தர் ஏற்க, வாகை சந்திரசேகர் கதாநாயகன் சங்கருக்கு நண்பனாய் நடிக்க, ராபர்ட் ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, இப்ராஹிம் இயக்க ஒருதலை ராகம் உருவானது. ஒருதலை ராகம் படத்தின் வெற்றி ஒரு தலைமுறையையே பழைய காதல் நினைவுகளில் மூழ்கச் செய்தது குறிப்பிடத்தக்கது.

நினைத்த நேரத்தில் ஷுட்டிங் ஸ்பாட்டில் அமர்ந்து வசனங்கள் எழுதும் திறமை படைத்த டி.ராஜேந்தர் தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆனது இப்படித்தான். அதன்பின் அவர் இயற்றிய பல படங்கள் எப்படி வெற்றி பெற்றன என்பது தமிழ் சினிமா ரசிகர்களுக்குத் தெரிந்ததே.