தமிழ் சினிமாவின் சிறந்த கதை எழுத்தாளராகவும், குடும்ப இயக்குநராகவும், பட்ஜெட் படங்களின் நாயகன் என்று அழைக்கப்படுபவர்தான் விசு. நாடகம், தொலைக்காட்சித் தொடர்கள், மேடைப் பேச்சு நிகழ்ச்சிகள் என சினிமா மட்டுமல்லாது பல துறைகளிலும் தன்னுடைய முத்திரையைப் பதித்தவர். மேலும் திரைக்கதை, வசனத்தில் வெளியான திரைப்படம் தான் தில்லுமுல்லு. 1981-ல் ரஜினி, மாதவி, தேங்காய் சீனிவாசன் உள்ளிட்ட பலர் நடித்த இப்படம் ரஜினியின் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் வெளிவந்த திரைப்படமாகும்.
இந்தியில் ‘கோல்மால்’ என்ற பெயரில் வெளியான இத்திரைப்படத்தினை தமிழில் தில்லுமுல்லு என பெயரிடப்பட்டு இயக்கியவர் கே.பாலச்சந்தர். இசை எம்.எஸ்.விஸ்வநாதன். இந்தப் படத்திற்காக இயக்குநர் கே.பாலச்சந்தரிடம் அப்போது உதவியாளராக இருந்த விசு திரைக்கதை, வசனம் எழுதினார்.
மேலும் இந்தக் கதையில் முதலில் விசு எழுதும் போது ரஜினியை மனதில் வைத்து எழுதவில்லை. அப்போது ரஜினி அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டு இருந்தார். மேலும் ஆக்சன் படங்களிலும், கமர்ஷியல் படங்களிலும் நடித்து வந்தவர் திடீரென இந்த காமெடி கதாபாத்திரத்தில் நடிப்பாரா என்ற எண்ணமும் விசுவுக்குள் எழுந்தது.
பயில்வானை வச்சு செஞ்ச ஷகிலா… ஒரே கேள்வியில் ஆட்டத்தை முடித்த சம்பவம்…
எனவே கே.பாலச்சந்தரிடம் இந்தக் கதையில் ரஜினி எப்படி செட் ஆவார் என்று விசு கேட்ட போது, ரஜினிக்கு இந்தக் கதாபாத்திரம் கண்டிப்பாக செட் ஆகும். அதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூற, பின் விசு மளமளவென திரைக்கதை, வசனம் எழுத ஆரம்பித்தார். பின்பு படம் வெளியானது.
கே. பாலச்சந்தர் சொன்னது போலவே படம் சூப்பர்ஹிட் ஆனது. இதில் ரஜினியைவிட ஒருபடி மேலே போய் தேங்காய் சீனிவாசன் அசத்தியிருப்பார். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத இந்தத் திரைப்படம் ரஜினி எந்தக் கதாபாத்திரத்திற்கும் பொருந்துவார் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது.
இந்தப் படம்பற்றி விசு பழைய பேட்டி ஒன்றில் குறிப்பிடம் போது, ”ரஜினியை இந்தக் கதாபாத்திரத்தில் என்னால் உருவகப்படுத்த முடியவில்லை. எனினும் கே.பாலச்சந்தர் கொடுத்த நம்பிக்கையே இந்தப் படத்தின் வெற்றிக்கு வழிகோலியது“ என்றார்.
மேலும் ரஜினியின் சினிமா மைல்கல்லில் முக்கிய படமாகவும் தில்லுமுல்லு இடம்பெற்றது.