பயில்வானை வச்சு செஞ்ச ஷகிலா… ஒரே கேள்வியில் ஆட்டத்தை முடித்த சம்பவம்…

பிரபல நடிகரும், சினிமா பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதனை ஷகிலா பேட்டி ஒன்றில் கேள்விகளால் வெளுத்து வாங்கிய சம்பவம் தான் இப்போது சமூக வலைதளங்களின் ஹாட் டாபிக். பயில்வான் ரங்கநாதன் தனது வலை தளப் பக்கங்களிலும், இதர சேனல்களின் பேட்டிகளிலும் நடிகர், நடிகைகளில் தனிப்பட்ட வாழ்க்கை விஷயங்களைப் பற்றி கடுமையாக விமர்சித்து வந்தார்.

மேலும் அவர்களின் முந்தைய காதல் வாழ்க்கை, திருமண வாழ்க்கை போன்றவற்றைப் பற்றியும் பொதுவெளிகளில் அநாகரீகமாகப் பேசி வந்தார். இவர் சொல்வது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியாது. இருப்பினும் இவ்வாறு அவர் பேசுவது பல நடிகர் நடிகைகளை சங்கடத்திற்கு உள்ளாக்கியது.

இவர் பேச்சிற்கு சிலர் எதிர்ப்புத் தெரிவித்து நடுரோட்டில் சண்டை போட்ட சம்பவங்களும் நடந்துள்ளன. இப்படி சினிமா கிசுகிசு என்ற பெயரில் தரக்குறைவாக பேசிய பயில்வான் ரங்கநாதனை சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை ஷகிலா கேள்விகளால் வெளுத்து வாங்க அவர் முகத்தில் ஈயாடவில்லை. கலைஞர் தொலைக்காட்சியில் நடிகை குயிலி மற்றும் ஷகிலா ஆகியோர் பயில்வான் ரங்கநாதனை பேட்டி கண்ட பொழுது, உங்கள் மகள் ஒருவரைக் காதலிக்கிறார். அவர் ஆண் அல்ல பெண் என்று ஷகிலா கூற, ஒருகனம் பயில்வான் ரங்கநாதன் முகம் மாறுகிறது.

தீனாவுக்கு முன்னால ஏ.ஆர். முருகதாஸ் செதுக்கிய கதை.. இன்றும் கிடப்பில் போடப்பட்டிருக்கும் மர்மம்

தொடர்ந்து பேசிய பயில்வான் ரங்கநாதன், இப்படியெல்லாம் பொய் சொல்லாதீங்க.. உங்க நாக்கு அழுகிடும். என்று கூற, ஷகிலாவோ இல்லை உண்மையைத் தான் சொல்கிறேன். உங்கள் பொன்னுக்கும், எனக்கும் வேண்டியவர்கள் தான் இதைத் சொன்னார்கள் என்று கூற, பயில்வான் ரங்கநாதன் உடனே கோபமடைந்து பேச, அப்போது குயிலி குறுக்கிட்டு, “இப்போது இதைச் சொன்னவுடன் உங்களுக்கு எப்படி கோபம், வருத்தம் வருகிறது. இதேபோல்தானே ஒவ்வொரு நடிகைகளைப் பெற்ற அம்மாக்களுக்கும் இருந்திருக்கும்.” என்று கூற பயில்வான் ரங்கநாதன் அமைதியாக இருந்தார்.

தற்போது இந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள் கர்மா சும்மா விடாது பூமராங் என்று கமெண்ட்டுகளில் பதிவிட்டு வருகின்றனர். பயில்வானுக்கு சரியான ஆள் ஷகிலாதான் என்றும் கூறிவருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...