அவங்க எழுந்திருச்சா தான் இவங்க அடங்குவாங்க… சமுத்திரக்கனி தத்துவத்தை உதிர்க்க காரணமே அந்த நல்ல மனுஷன் தானாம்…!

By Sankar Velu

Published:

நடிகர் சமுத்திரக்கனி என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது அவர் படம்னா ஒரே கருத்தா அல்லவா இருக்கும் என்பது தான். படம் முழுக்க முழுக்க அட்வைஸா வச்சிருப்பாரே என அலப்பு தட்ட பேசுவார்கள். நல்லதுக்காகத் தான் அப்படி அவர் படத்தில் எடுக்கிறார்.

சினிமா என்ற சக்தி வாய்ந்த ஊடகத்தின் மூலம் தானே இதுபோன்ற நல்ல கருத்துகளை எல்லாம் சொல்ல முடியும் என்ற எண்ணத்தில் தான் சொல்கிறார். அது வேடிக்கையாகி நல்ல இயக்குனராக இருந்த அவரை தற்போது வெறும் நடிகனாக மாற்றி விட்டது.

சினிமா ஆசை யாரைத் தான் விட்டது? நடிகர்கள் எல்லோருடைய ஆரம்ப கட்ட வாழ்க்கையையும் கிளறிப் பார்த்தால் முக்கால்வாசி பேர் சினிமா மோகத்தால் சென்னைக்கு ஓடி வந்தவர்களாகத் தான் இருப்பார்கள். அந்த வகையில் நடிகர் சமுத்திரக்கனியும் விதிவிலக்கல்ல.

Saattai
Saattai

10ம் வகுப்பு படிக்கும்போதே அப்பாவோட பாக்கெட்டில இருந்து 130 ரூபாயை லபக்கிக் கொண்டு சென்னைக்கு வந்துள்ளார். அப்படி அவர் வந்ததும் இறங்கிய இடம் மவுண்ட் ரோடு. இரவு 10 மணி. அங்கு அவருக்கு யாரையுமே தெரியாதாம். எங்கே போறதுன்னு தெரியாம ஒரு ஓரமா பிளாட்பார்மில் படுத்து விட்டாராம்.

அப்போ ஒரு ஏட்டையா அங்கு வந்தாராம். என்ன ஏதுன்னு முழுசா விசாரிச்சவரு, தம்பி இது நல்ல இடம் இல்லன்னு சொல்லிருக்காரு. அது மட்டுமல்லாமல் அவரு அப்போ சைக்கிள்ல தான் ரவுண்ட்ஸ் வந்தாராம். அந்த சைக்கிளிலேயே சமுத்திரக்கனியையும் ஏற்றிக் கொண்டு ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று பேப்பரை விரித்துப் படுக்கவும் வைத்தாராம்.

காலையில் எழுந்ததும் டீ வாங்கிக் கொடுத்து பத்திரமாக ஊருக்கும் அனுப்பி வைத்தாராம். அப்போது கையில காசு வச்சிருக்கியான்னு கேட்டாராம். ஆமான்னு சொல்லவும், ஒழுங்கா ஊருக்குப் போன்னு அனுப்பி வைத்தாராம். இதைக் கண்டு நெகிழ்ந்து போன சமுத்திரக்கனி, நான் சென்னையில சந்திச்ச முதல் மனுஷனே இவர் தாம்பா… ரொம்ப ரொம்ப நல்லவருன்னு ஒரு டிவி பேட்டியில சொன்னாராம்.

Appa
Appa

அது மட்டுமல்லாம, நல்லவங்க நிறைய பேர் இருக்காங்க. ஆனா அமைதியா இருக்காங்க. நல்லவங்களோட அமைதி ரொம்பவே ஆபத்தானது. அது இருக்கக்கூடாது. அப்படி நல்லவங்க எழுந்திருச்சாதான் கெட்டவங்க அடங்குவாங்க..ன்னு ஒரு தத்துவத்தையும் நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல அசால்டாகச் சொன்னாராம்.

கொஞ்சம் யோசிச்சிப் பார்த்தா அது யாராலும் மறுக்க முடியாத நூறு சதவீதம் உண்மை தாங்க. அதனால் தானோ என்னவோ ஒரு சில குறும்பான ரசிகர்கள் அவரைக் கருத்து கந்தசாமியாவே ஆக்கி கலாய்த்து வருகிறார்கள்.

அப்பா, சாட்டை போன்ற தரமான படங்களை இயக்கியவர் சமுத்திரக்கனி. இப்போது இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.