இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் சாமானியன் படவிழாவில் கலந்து கொண்டு ராமராஜனைப் பற்றியும், ரஜினி பட நஷ்டத்தைப் பற்றியும் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இயல்பான எதார்த்தமான நடிகர் ராமராஜன். எம்ஜிஆர், சிவாஜி, கமல், ரஜினி என எல்லாரையும் தூக்கி சாப்பிடுற மாதிரி ஆக்டிங் கொடுப்பார். தன் மனம் எப்படி இருக்கிறதோ அதே மாதிரி அவரது முகத்தோற்றம் கொண்டவர். ராமராஜனை எல்லாம் இயக்க முடியாமல் போய்விட்டதே என்று எனக்கு வருத்தம் உண்டு.
டிஸ்டிரிபியூஷன்ல நான் வாங்குன முதல் படமே ரஜினி படம். தர்மத்தின் தலைவன். அது தேவர் பிலிம்ஸ் படம். அதுக்குக் கொஞ்சம் பிரச்சனையாகி படத்தோட ரிலீஸ் தள்ளிப் போயிக்கிட்டே இருக்கு.
பெரும் தொகையை முதலீடு பண்ண வச்சிட்டாங்க. எனக்கு ராமநாராயணன் சாருக்கிட்ட இருந்து தான் வாங்கணும். நீங்க 9 லட்ச ரூபாய்க்கு 7 லட்ச ரூபாய் கொடுத்துட்டீங்க. 7 லட்ச ரூபாயைக் கொடுத்துடறேன்.
மீதி உள்ள 2 லட்சத்துக்குப் பதிலா ஒரு படம் தரேன். ரஜினி சார் படத்தை டிஸ்டிரிபியூட் பண்ணிட்டு ராமராஜன் படத்தை ரிலீஸ் பண்றதான்னு நினைச்சேன். அதையும், இதையும் சேர்த்து வாங்கிடவான்னு கேட்டேன். யோவ் இதுக்கே நீ 7 லட்சம் பேலன்ஸ் கொடுக்க வேண்டியிருக்கு. அதை எப்படி வாங்க முடியும்? அங்க மிஸ் பண்ணினேன்.
அந்த கரகாட்டக்காரனை. ஒரு கோடி ரூபாய் அப்போ கலெக்ட் பண்ணிச்சு. இன்னொரு உண்மையைச் சொல்றேன். ரஜினி சார் படத்துல எனக்கு நாலரை கோடி ரூபாய் நஷ்டம். அப்போ ராமராஜன் எவ்ளோ பெரிய ஆளுன்னு பார்த்துக்கோங்க.
இது தப்பா ரைட்டான்னுலாம் இல்ல. சினிமா சாமானியனையும் பெரிய ஆளா ஆக்கிடும். பெரிய ஆளையும் சாமானியனா ஆக்கிடும். இப்ப ரெண்டுமே அவர் தான். இப்ப சாமானியனா தெரியறாரு.
இந்தப் படம் ரிலீஸான உடனே எஜமானாகி விடுவார். ராமராஜன் பழகுவதற்கு ரொம்ப மென்மையானவர். எந்த இடத்திலும், அன்பு, பண்பு, பாசத்தை விட்டுக் கொடுக்க மாட்டார். அவருக்கிட்ட இருந்து அதைக் கத்துக்கிடணும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பல கடினமான கருத்துகளையும் எளிமையாகச் சொல்லி அசத்தியுள்ளார். இவர் ரஜினியை வைத்து எடுத்த படம் எஜமான். இப்போது பார்த்தாலும் படம் செம மாஸாக இருக்கும். அப்படி இருக்கும் போது ரஜினியையே குறை சொல்லும் வகையில் ஒரு கருத்தை முன்வைத்துள்ளார். அது நடந்ததாக இருந்தாலும் தைரியமாக சொல்லியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.