தமிழ் சினிமாவின் உச்ச ஜாம்பவான்களைக் கொண்டு அஜீத் நடிப்பில் கடந்த 2006-ல் வெளி வந்த திரைப்படம் தான் வரலாறு. படத்தின் பெயரில் மட்டும் வரலாறு இல்லை. வசூலிலும் வரலாறு படைத்தது. அதுவரை அஜீத் நடிப்பில் வெளியாகி ஹிட் ஆன அத்தனை படங்களின் வசூலையும் வரலாறு முறியடித்தது. அஜீத் படங்களின் ஆஸ்தான தயாரிப்பாளரான நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்திதான் இந்த படத்தையும் தயாரித்திருந்தார். கே எஸ் ரவிக்குமார் இந்த படத்தை இயக்கியிருந்தார்.
எழுத்தாளர் சுஜாதாவின் கதையும், ஏ ஆர் ரஹ்மானின் இசையும், பி சி ஸ்ரீராம் ஒளிப்பதிவு, வைரமுத்து பாடல்கள் என படம் முழுக்க பெரிய ஜாம்பவான்களே உருவாக்கியிருந்தனர். அஜீத்துக்கு இந்த படம் அவரது சினிமா வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனை படமாக அமைந்தது. 12 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படம் 50 கோடிக்கு மேல் வசூலித்தது.
இவ்ளோ பெரிய ஹிட் பாட்டுக்கு வெறும் அரைமணி நேரமா..? கண்ணதாசன் செய்த மேஜிக்!
இந்த படத்தில் அஜீத் தந்தை, இரு மகன்கள் என மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருப்பார். இதில் தந்தை சிவசங்கர் கதாபாத்திரம் அப்போது எந்த ஹீரோவுமே ஏற்று நடிக்க தயங்கிய கதாபாத்திரம். ஏனெனில் பெண்மை தன்மை வாய்ந்த ஒரு நடனக்கலைஞராக இப்படத்தில் அஜீத் நடித்திருப்பார். இந்த கதாபாத்திரமும், அஜீத்தின் நடிப்பும் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. எப்படி அஜீத் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் என கோலிவுட்டே ஆச்சர்யத்தில் மூழ்கியது.
அஜீத் பெண் தண்மை வாய்ந்த நடன கலைஞராக எப்படி நடை இருக்க வேண்டும் என் இயக்குனர் கே எஸ் ரவிகுமாரிடம் கேட்டுள்ளார். அதற்கு கே எஸ் ரவிக்குமார் இந்த கதாபாத்திரம் ஒரு படையப்பா நீலாம்பரி, ஒரு நடிகர் திலகம், ஒரு சூப்பர் ஸ்டார் மூன்றும் கலந்த கலவையாக இருக்க வேண்டும் என்று நடையில் நீலாம்பரியையும், முக பாவனைகளில் நடிகர் திலகத்தையும், பேசும் பொழுது ரஜினியையும் மனதில் வைத்து நடியுங்கள் என்று அஜீத்துக்கு சொல்லி கொடுத்திருக்கிறார்.
அதன்படியே அஜீத்தும் நடிக்க சிவசங்கர் கதாபாத்திரம் அற்புதமாக வந்துள்ளது. இதைப்பற்றி கே எஸ் ரவிக்குமார் நிகழ்ச்சி ஒன்றில் கூறுகையில், ஒரு உச்ச நடிகர் இது போன்ற ஒரு கதாபாத்திரத்தில் ஏற்று நடிப்பது என்பது அவர்களை இமேஜை பாதிக்கும் என் நினைப்பார்கள். ஆனால் அஜீத் சொன்ன உடனேயே நடிக்க ஒப்புக்கொண்டு அதில் சிறப்பாக நடித்தார் என்றும் கூறியுள்ளார்.