இவ்ளோ பெரிய ஹிட் பாட்டுக்கு வெறும் அரைமணி நேரமா..? கண்ணதாசன் செய்த மேஜிக்!

தமிழ் சினிமாவை ஸ்டுடியோவிற்குள் இருந்து கிராமத்து மண் வாசனைக்குள்ளும், புழுதிக்குள்ளும், வயல் வெளிக்குள்ளும் கொண்டு வந்து மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தவர் பாரதிராஜா. அவரின் முதல் படமான 16 வயதினிலே இந்திய சினிமா உலகையே புரட்டி போட்டது. அதன்பின் வெளியான கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் ராதிகாவை அறிமுகப்படுத்தி அந்த படத்தையும் வெற்றி படமாகக் கொடுத்தார். இயல்பான கிராமத்து மனிதர்கள் நடிப்பு, மாறாத கிராமத்து வட்டார வழக்கு போன்றவற்றால் பாரதிராஜாவின் படங்கள் ஓஹோவென ஓடியது. இதே வகையில் தன்னுடைய உதவியாளரான பாக்கியராஜை கதாநாயகனாக அறிமுகப்படுத்தி 1979-ல் இயக்கிய படம்தான் புதிய வார்ப்புகள்.

வழக்கமான கிராமத்து காதல் கதையை தன்னுடைய பாணியில் விறுவிறுப்புடன் சொல்லி இந்த படத்தையும் ஹிட் கொடுத்தார் பாரதிராஜா. இளையராஜாவின் இசை படத்திற்கு பெரும் பலம் சேர்த்து, இந்த படத்தில் இடம் பெற்ற ஒரு ஹிட் பாடல்தான் ‘வான் மேகங்களே.. வாழ்த்துங்கள்’ என்ற பாடல்.

டாக்டராக ஆசைப்பட்டவருக்கு வந்த சினிமா சான்ஸ்.. தமிழ் சினிமாவின் முதல் ‘காதல் மன்னன்’ ஜெமினி கணேசன் உருவாகியது இப்படித்தான்

படத்தில் இந்த பாடலை வைக்கும் எண்ணமே பாரதிராஜாவுக்கு கிடையாதாம். ஒருமுறை இந்த படத்திற்காக இதயம் போகுதே என்ற காதல் தோல்வி பாடலை படம் எடுப்பதற்கு முன்பே ரெகார்டிங் செய்து வைத்திருந்தார்களாம். எல்லாம் தயாராக இருந்து மறுநாள் படத்தின் பூஜைக்காக இந்த பாடல் தயாரிக்கப்பட்டிருந்தது. திடீரென பாரதிராஜாவுக்கு ஒரு யோசனை. இந்த படத்தில் மேலும் ஒரு டூயட் பாடலை சேர்க்கலாம் என் எண்ணி இளையராஜாவிடம் தெரிவிக்க உடனே அவரும் சம்மதம் சொல்ல பாடல் எழுத கவியரசரை அழைக்க கவிஞரும் ரெடாய் ஆனார்.

பாரதிராஜா காட்சி குறித்து விவரிக்க மளமளவென 10 நிமிடங்களில் கவிஞர் வார்த்தைகளை பாடலாக கொட்டி இருக்கிறார்.
“வான் மேகங்களே வாழ்த்துக்கள் பாடுங்கள்

நான் இன்று கண்டு கொண்டேன் ராமனை

வான் மேகங்களே..”

என்று வரிகள் நீள இளையராஜாவின் மெட்டும் இணைந்து அற்புத பாடலாக உருவெடுத்தது. அரை மணி நேரத்தில் மொத்த பாடலும் பதிவாகி உயிர் பெற்றது. கேட்ட நிமிடத்தில் கவிஞரின் கற்பனைத் திறத்தால் காலத்தால் அழியாத சூப்பர் ஹிட் பாடல் கிடைத்தது இப்படித்தான்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews