தமிழ் சினிமாவில் எம் ஜி ஆர், சிவாஜி காலங்கள் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த நிலையில் தனக்கென ஒரு தனி பாணியைக் கடைபிடித்து எம் ஜி ஆர், சிவாஜி ஆகிய இருவருக்குமே போட்டியாக நடித்தது புகழ் பெற்றவர்தான் காதல் மன்னன் ஜெமினி கணேசன். இவருக்கு இந்த காதல் மன்னன் பட்டம் வந்த கதை சுவாரஸ்யமானது.
ஜெமினி கணேசன் மிகவும் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். எனினும் படிப்பில் படு சுட்டியாக இருந்திருக்கிறார். ஒரே மகன் என்பதால் அதிக செல்லம் கொடுத்து வளர்த்தனர். இவரது 11 வயதில் தந்தை காலமாக தாய், பாட்டி பொறுப்பில் வளர்ந்திருக்கிறார். நன்றாகக் படித்து பி எஸ் சி வரை படித்திருக்கிறார். அனால் அவருக்கு டாக்டராக வேண்டும் என்பது கனவு.
எம்ஜிஆரின் வள்ளல் குணத்துக்கு அடித்தளம் போட்ட புட்டு கிழவி.. இப்படி ஓர் சம்பவமா?
அந்த நேரத்தில் இவருக்குத் திருமண ஏற்பாடுகள் நடக்க அவரின் மாமனார் அவரை படிக்க வைப்பதாகக் கூறியிருக்கிறார். இந்த நம்பிக்கையில் திருமணத்திற்குச் சம்மதித்த ஜெமினி கணேசன் அலமேலுவை கரம் பிடித்தார். இந்த நேரத்தில் சென்னை கிறிஸ்டியன் கல்லூரியில் விரிவுரையாளராக வேலை கிடைக்க டாக்டர் கனவை மூடிவிட்டு அங்கே பணியாற்றினார். அதன்பின் இவருக்கு சினிமா ஆசை துளிர்விட ஜெமினி ஸ்டூடியோவில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். இதனால் அவரின் இயற் பெயரான கணேசனுடன் ஜெமினி என்ற பெயரும் ஒட்டிக்கொண்டு ஜெமினி கணேசன் என்று ஆனது.
தொடர்ந்து படங்கள் நடிக்க ஆரம்பித்தவர் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். சினிமாவிற்கு வந்த பிறகு ஹீரோயின்களிடம் நெருக்கமாக நடிப்பது, காதல் வசனங்கள் பேசி மயக்குவது, வர்ணிப்பது, போன்றவற்றால் பெண்கள் ரசிகைகள் ஜெமினிகணேசனுக்கு அதிகமாகினர். ஐவரும் நிறைய கிசுகிசுக்களில் சிக்க ஆரம்பித்தார். பேட்டி ஒன்றில் இது பற்றி கூறும் ஜெமினி, ”சினிமாவில் கொஞ்சம் அப்படி இப்படி போனது உண்மை தான். அதுவே ஒரு பழக்கமாகி என்னை காதல் மன்னனாக மாற்றியது. இதுக்காக நான் எதுவும் பிளான் பண்ணி பண்ணல. பின் அந்த பாதை தவறு என தெரிந்ததும் குடும்பம், மனைவிக்கு துரோகம் பண்றேன்னும் மனசாட்சி உறுதியால் குடும்பத்தின் மீது அதன் பிருகு அதிக அளவில் அன்பு செலுத்த ஆரம்பித்து அதிலிருந்து மீண்டேன்” என்று கூறி இருக்கிறார் அந்த காலத்து காதல் மன்னன்.