சிம்புவோட விரல் வித்தை ஸ்டைலுக்கு காரணமான இயக்குநர்.. பாட்டிலேயே பஞ்ச் தெறிக்க விட்ட வாலி!

By John A

Published:

ஒரு வயது குழந்தையாக இருக்கும் பொழுது சினிமாவில் அறிமுகமாகி பின் தன் தந்தையின் திரைப்படங்களை தொடர்ந்து நடித்து பத்து வயதிற்கு உள்ளாகவே சினிமா பாடம் படித்து வளர்ந்தவர் தான் சிம்பு. தன் தந்தை டி.ராஜேந்தர் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திர மாக நடித்து அப்போதுள்ள குழந்தை நட்சத்திரங்களுக்கு சவால் கொடுத்தார்.

பஞ்ச் வசனங்கள் என்னவென்று தெரியாத இளம் வயதிலேயே பன்ச் வசனம் பேசி அசத்தியவர். அதன் பின்னர் சற்று வாலிபன் ஆனது மீண்டும் தன் தந்தை டி ராஜேந்தர் இயக்கத்தில் முதன்முதலாக ‘காதல் அழிவதில்லை’ என்னும் படத்தில் ஹீரோவாக நடித்தார் சிம்பு. தன்மகன் கமர்சியல் ஹீரோவாக வர வேண்டும் என்று ஆசைப்பட்ட டி ராஜேந்தர் ஹீரோவான முதல் படத்திலேயே கமர்சியல் படங்களுக்குரிய அத்தனை அம்சங்களையும் கொடுத்து படத்தை ஹிட் ஆக்கினார்.

அதன் பின்னர் தன் தந்தையின் இயக்கத்தில் இருந்து வெளியே வந்து சிம்பு முதன்முதலாக வேறு இயக்குனரின் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அப்படி இவர் முதன்முதலாக இணைந்த இயக்குனர் தான் ஏ வெங்கடேஷ். இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக பணியாற்றிய ஏ வெங்கடேஷ் ‘பகவதி’ படத்தின் வெற்றிக்கு பின்னர் சிம்புவை ஹீரோவாக வைத்து ‘தம்’ படத்தை இயக்கினார். கமர்சியல் இயக்குனரான வெங்கடேஷ் சிம்புவை ‘தம்’ படத்தில் ஒரு கமர்சியல் நாயகனாக உருவாக்கினார்.

தம் படம் 2003இல் வெளியாகி 100 நாட்களை கடந்து ஓடியது. இந்த படத்தில் இடம்பெற்ற பாடலான ‘கலக்குவேன் கலக்குவேன்..’ என்ற பாடல் சிம்புவின் முதல் விரல் வித்தை பாடலாக அமைந்தது. இந்த பாட்டிற்காக இயக்குனர் வெங்கடேஷ் சிம்புவிடம் உங்களுக்கு ரஜினி படங்களில் வருவது போல ஒரு ஓபனிங் சாங் வைக்கலாம் என்று கூறியிருக்கிறார். மேலும் அதில் நீங்கள் ஏதாவது வித்தியாசமாக ஸ்டைலை உருவாக்க வேண்டும் என்றும் கூறி இருக்கிறார்.

எம்ஜிஆரின் வள்ளல் குணத்துக்கு அடித்தளம் போட்ட புட்டு கிழவி.. இப்படி ஓர் சம்பவமா?

சினிமா ரத்தம் ஊறிய சிம்பு, சட்டென இயக்குனர் சொன்னவுடன் தனது கைகளை நீட்டி வித்தியாசமான விரல் அசைவுகளைக் கொடுத்துள்ளார். இது இயக்குனருக்கு மிகவும் பிடித்துப் போக அதை அப்படியே பாடலில் பயன்படுத்தினார். முதன் முதலாக சிம்பு இவ்வாறு செய்தது பின் அவரது ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனது .

மேலும் அவர் தனது அடுத்தடுத்த படங்களிலும் இதுபோன்ற விரல் வித்தைகளை காட்ட ஆரம்பித்தார். இதன் காரணமாகவே விரல் வித்தை நடிகர் என்றும் பெயர் பெற்றார். மேலும் சிம்புவிற்காக கவிஞர் வாலி இந்த பாடலில் அவருடைய பெயரை சேர்க்கும் வகையில் ‘நான் சொன்னா நம்பு உன் நண்பன் தானே சிம்பு..’ என்று வரிகள் எழுத இயக்குனரும் சிம்புவும் மிகவும் மகிழ்ந்தனர். இவ்வாறு சிம்புவுக்கு ‘தம்’ படத்தின் மூலம் வெற்றியை கொடுத்த வெங்கடேஷ் மீண்டும் தனது அடுத்த படமான ‘குத்து’ படத்திலும் சிம்புவை ஆக்சன் ஹீரோவாக நடிக்க வைத்தார். சிம்புவின் வளர்ச்சியில் இயக்குனர் வெங்கடேசுக்கும் முக்கிய பங்கு உண்டு.