தனது சொந்த ஊரான ராமநாதபுரம் கீழக்கரையை விட்டு விட்டுவெறும் 4.50 சம்பளத்தில் சென்னைக்கு வந்து பிழைப்பு நடத்தியவர் ராஜ்கிரண். சிறுவயதில் ஐபிஎஸ் அதிகாரியாக ஆசைப்பட்டவர் குடும்ப வறுமை காரணமாக 16 வயதிலேயே பிழைப்பு தேடி சென்னை வந்து சினிமா விநியோகக் கம்பெனி ஒன்றில் வேலைக்குச் சேர்கிறார். அங்கே தனது தொழில் திறமையால் விரைவிலேயே தன்னை வளர்த்த முதலாளிகளின் ஆசியோடு புதிதாக சினிமா விநியோகக் கம்பெனியை தொடங்கினார்.
விநியோகஸ்தராக சினிமா வாழ்க்கையை துவங்கியவர் தயாரிப்பாளராக சில படங்கள், பிறகு நடிகராக படங்கள் நடிக்க ஆரம்பித்தார். அடுத்த நகர்வாக, அரண்மனைக் கிளி படத்தின் மூலம் இயக்குநராகவும் அவதாரம் எடுத்தார். ராஜ்கிரண் ஆரம்ப காலத்தில் சினிமா விநியோகஸ்தராக இருக்கும் பொழுது அப்போது பழம்பெரும் இயக்குனர் ஏ.சி திருலோக சந்தர் இயக்கிய ‘பத்ரகாளி’ திரைப்படத்தை விநியோகம் செய்யும் முயற்சியில் இறங்கினார். ஏற்கனவே பத்திரகாளி கதையை நாவலாக படித்திருந்த ராஜ்கிரனுக்கு அதனை திரைக்கதையாக யோசித்தபோது அந்த கதையில் ஒரு சில காட்சிகள் அவருக்கு திருப்திகரமாக இல்லாமல் இருந்தது.
அந்தக் காட்சிகளை அந்தக் காட்சிகளை கொஞ்சம் மாற்றிவிட்டால் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும் என ராஜ்கிரனுக்கு மனதில் தோன்றியது. ஆனால் இந்த மாற்றத்தை எப்படி இயக்குனர் ஏ.சி திருலோக சந்தரிடம் எப்படி கூறுவது என்று யோசித்துக் கொண்டிருந்தார் ராஜ்கிரண். ஏனெனில் ஏ.சி திருலோக சந்தர் எம்ஜிஆரை வைத்து ‘அன்பே வா’ சிவாஜியை வைத்து ‘தெய்வ மகன்’, ‘பாரத விலாஸ்’ எனப் பல காலத்தால் அழியாத சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர். அப்படிப்பட்ட மேதையிடம் எப்படி தான் திருத்தங்கள் சொல்வது என ராஜ் கிரண் யோசித்துக் கொண்டிருந்தார்.
இளைய நிலா வா..? சலவை நிலா வா..? வைரமுத்துவுடன் வாக்குவாதம் செய்த ஆர். சுந்தர்ராஜன்..
அதன்படி ஒரு நாள் இயக்குனரை சந்திக்க கிளம்பிய ராஜ் கிரண், ஏ.சி திருலோக சந்தர் இயக்கிய இரு மலர்கள் படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியை இயக்குனரை போலவே மிகவும் விளக்கமாக கூறியிருக்கிறார். இவரின் சினிமா ஆர்வத்தினை இயக்குனர் கண்டு வியந்து போயிருக்கிறார். இப்போது இதுதான் சரியான தருணம் என மனதில் நினைத்த ராஜ்கிரன் தான் ‘பத்ரகாளி’ படத்தில் யோசித்து வைத்திருந்த காட்சியை மாற்றச் சொல்லி இயக்குனரிடம் பக்குவமாய் எடுத்து கூறி இருக்கிறார்.
இயக்குனர் ஏ.சி திருலோக சந்தர் ராஜ்கிரனுக்கு மறுப்பு ஏதும் சொல்லாமல்,’ நல்லது இந்த காட்சியை இப்படி மாற்றினால் தான் படம் நன்றாக இருக்கும் என நானும் நினைத்தேன், நீங்களும் அதையே சொல்லி விட்டீர்கள்.. முதலில் உங்களைபார்த்து சாதாரணமா நினைத்து விட்டேன். ஆனால் நீங்கள் எதிர்காலத்தில் பெரிய ஆளா வருவீங்க..” என்று அவர் சொன்ன திருத்தத்தையும் ஏற்று வாழ்த்தியிருக்கிறார். அதன் பின் அவர் சொன்னது போலவே கதையில் திருத்தங்கள் செய்யப்பட்டு பத்திரகாளி திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. தமக்குத் தோன்றிய ஒரு கருத்தை திருத்தத்தை அதை உருவாக்கியவர்களிடம் எப்படி பக்குவமாய் கூறுவது என்பதற்கு ராஜ்கிரன் சம்பவம் ஓர் சிறந்த உதாரணம். இல்லையெனில் அடுத்தவரின் மனநிலையை நாம் யோசிக்காமல் கூறும்போது நமது கருத்து அவ்விடத்தில் நிராகரிக்கப்படும்.