இளைய நிலா வா..? சலவை நிலா வா..? வைரமுத்துவுடன் வாக்குவாதம் செய்த ஆர்.சுந்தர்ராஜன்..

தமிழ் சினிமா உலகில் ‘பயணங்கள் முடிவதில்லை’ படத்தின் மூலம் தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்த இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன். அந்தப் படத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து இவருக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. ஆர் சுந்தர்ராஜனின் ஸ்டைலே ஷூட்டிங் ஸ்பாட்டில் காட்சிகளை முடிவு செய்வது தான். இவ்வாறு சூட்டிங் ஸ்பாட்டில் தன் மனதிற்கு தோன்றிய வசனங்களையும் காட்சிகளையும் கதைக்கு ஏற்றார் போல் படம் பிடித்து அதில் வெற்றியும் கண்டவர்.

ஆர் சுந்தர்ராஜன் இளையராஜா கூட்டணியில் வந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது. மேலும் கேப்டன் விஜயகாந்த் உடன் ‘வைதேகி காத்திருந்தாள்’ படத்தில் ஆரம்பித்த இவர்களது பயணம் அடுத்தடுத்த படங்களில் இணைந்தது. மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து ‘ராஜாதி ராஜா’என்ற படத்தையும் இயக்கினார். இப்படி தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் சுந்தர்ராஜன் தற்போது நடிகராக வலம் வருகிறார்.

இவர் தனது முதல் வெற்றி படமான ‘பயணங்கள் முடிவதில்லை’ படத்திற்காக நடிகை பூர்ணிமாவிடம் கதையை சொல்லிய நிலையில் அவர் முதலில் ஒப்புக்கொள்ளவில்லை. ஏனெனில் அப்பொழுது புது மொழி இயக்குனர்களின் படங்கள் தொடர்ச்சியாக தோல்வி அடைந்ததால் அவர் சுந்தர்ராஜன் கதையை நிராகரித்திருக்கிறார். பின்னர் மறுபடியும் அவர் கதை சொல்லும் திறனை பார்த்து அவருக்கு கால்சீட் வழங்கியிருக்கிறார்.

பாடலில் எழுந்த சந்தேகம்.. டியூனுக்கு வரி கிடைக்காத நிலையில் பாடலாசிரியராக மாறிய இசைஞானி..

பல சூப்பர் ஹிட் பாடல்களை கொண்ட பயணங்கள் முடிவதில்லை படத்திற்காக வைரமுத்து எழுதிய பாடல் தான் இளைய நிலா பொழிகிறது. இந்தப் பாடலின் காட்சிகளை கவிஞர் வைரமுத்துவிற்கு இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன் சொல்லும் பொழுது முதலில் சலவை நிலா பொழிகிறது என்று எழுதியிருக்கிறார் வைரமுத்து.

ஆனால் இந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியாது ஆர் சுந்தர்ராஜன் வைரமுத்துவிடும் சலவை என்ற வார்த்தைக்கு அர்த்தம் கேட்டுள்ளார். பின்னர் இந்த வார்த்தை இயக்குனரான எனக்கே புரியவில்லை அப்புறம் எப்படி ரசிகர்களுக்கு புரியும். எனவே வேறு வார்த்தையை எழுதித் தரும்படி வைரமுத்துவிடும் கேட்டிருக்கிறார் எழுதித் தரும்படி வைரமுத்துவிடும் கேட்டிருக்கிறார். இதனால் வைரமுத்துக்கும் ஆர் சுந்தர்ராஜனுக்கும் வாக்குவாதம் நடந்திருக்கிறது.

அப்பொழுது இளையராஜா இதில் தலையிட்டு சலவை என்ற வார்த்தைக்கு பதிலாக இளைய என்ற வார்த்தையை மாற்றிக் கொடுத்து வாக்குவாதத்தை முடித்திருக்கிறார்வாக்குவாதத்தை முடித்திருக்கிறார். பின்னர் சுந்தர்ராஜ் நீ குணத்தினை தெரிந்து கொண்டு இளையராஜா அவருக்கு ஏற்றார் போல் பாடல்களையும் ண டியூன்களையும் அமைத்து கொடுத்து பல சூப்பர் ஹிட் பாடல்களை அவர் படங்களுக்காக இசையமைத்துக கொடுத்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...