தமிழ்ப்பட உலகில் வில்லன்கள் என்றாலே ரசிகர்களுக்கு ஒரு கற்பனை வரும். காலம் காலமாக இப்படித் தான் இருப்பார்கள். மொட்டை அடித்தபடி, கன்னத்தில் மரு வைத்துக் கொண்டு பார்க்க கபாலி மாதிரி இருப்பாங்கன்னு நினைப்பாங்க.
ஆனா இவர் அப்படி அல்ல. ஸ்மார்ட் லுக். குரல், மேனரிசம் தான் இவரது வில்லத்தனம். ஆனால் சாதாரண வில்லன்களை விட இவரது வில்லத்தனம் தான் மிரட்டலாக இருக்கும்.
அந்தக் காலத்தில் நம்பியார், வீரப்பா, ராதாரவி போன்ற நடிகர்கள் வில்லத்தனத்தில் தனக்கென்று ஒரு பாணியை உருவாக்கி நடித்தார்கள். ஆனால் இவர்களை எல்லாம் தாண்டி முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் வில்லத்தனத்தைக் காட்டியவர் தான் ரகுவரன்.
1983ல் வெளியான ஏழாவது மனிதன் படத்தில் தான் ரகுவரன் அறிமுகம் ஆனார். இந்தப் படம் தேசிய விருது பெற்றது. தொடர்ந்து ஒரு சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
இவரது நடிப்பில் சம்சாரம் அது மின்சாரம், மிடில் கிளாஸ் மாதவன், அஞ்சலி, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, முகவரி, யாரடி நீ மோகினி, காதலன், என் சுவாசக்காற்றே, அமர்க்களம் படங்கள் செம மாஸானவை. குறிப்பாக, பாட்ஷா படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கே கெத்துக் காட்டி அசத்தியவர் தான் ரகுவரன். இவர் ஏற்கனவே ரஜினிக்கு வில்லனாக மனிதன் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரகுவரன் ஒருமுறை காரில் பயணம் செய்து கொண்டிருந்தாராம். அப்போது சாலையில் வந்த மற்றொரு கார் அவரது காரை இடிப்பது போல வேகமாகச் சென்றதாம். அது மட்டுமல்லாமல் காரில் இருந்தவர்களும் ரகுவரனை ஏதோ கெட்ட வார்த்தை போட்டு திட்டி விட்டார்களாம்.
படத்திலே பயங்கரமான கெத்தோடு வில்லத்தனம் காட்டும் ரகுவரன் நிஜத்தில் சும்மா விடுவாரா? இதுதான் சமயம் என்று காரை வேகமாக ஓட்டி அந்த காருக்கு முன்னால் போய் மறித்தபடி நிறுத்திவிட்டு காரின் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டாராம். எவன்டா அவன்? யாருடா? எத்தனை பேருடா இருக்கீங்க..? வாங்கடா மோதி பார்க்கலாம்னு ரகுவரன் சொல்லவும் அங்கு கூட்டம் கூடி விட்டதாம்.
வந்து இருப்பவர்களோ ஏதோ சூட்டிங் நடக்கிறது போல என்று பேசிக்கொண்டார்களாம். அதன்பிறகு அந்த வழியாக வந்த நாசர் ரகுவரனை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றாராம். அதன்பிறகு அவரது காரை தம்பி எடுத்து வந்தாராம்.
இதையும் படிங்க… விஜய் ஆண்டனிக்கு கண்டனம் தெரிவித்த தமிழக கிறிஸ்தவ சபை கூட்டமைப்பு… பதிலுக்கு அவர் செய்த காரியம்…
திரையில் மட்டும் நடிக்கும் சாதாரண வில்லன் கிடையாது. நிஜத்தில் அதையும் தாண்டி கெத்தாக நிற்பவர் தான் இந்த ரகுவரன் என நிரூபித்து விட்டார். குறிப்பாக இங்கு வில்லத்தனம் என்று சொல்ல முடியாது. அநீதியைக் கண்டு பொங்கி எழுந்ததால் ரியல் ஹீரோ என்றே சொல்ல வேண்டும்.