விஜய் ஆண்டனிக்கு கண்டனம் தெரிவித்த தமிழக கிறிஸ்தவ சபை கூட்டமைப்பு… பதிலுக்கு அவர் செய்த காரியம்…

இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது நடிகராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவர் நடித்த ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் மெகாஹிட் ஆகி இவரை ஒரு நடிகராக அங்கீகரிக்க வைத்தது.

தற்போது விஜய் ஆண்டனி ‘ரோமியோ’ என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அந்த போஸ்டரில் பர்ஸ்ட் நைட் செட்டப்பில் கதாநாயகன், கதாநாயகி அமர்ந்திருக்கின்றனர். அப்போது கதாநாயகி கிளாசில் மது ஊற்றுவது போல் இருந்தது.

அதன் பிறகு, ‘ரோமியோ’ பட குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தப் போது, நடிகர் விஜய் ஆன்டணியிடம் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரைப் பற்றி கேட்டபோது, அவர் கூறியது என்னவென்றால், மது என்பது ஆண் பெண் இருவருக்கும் பொதுவான ஒன்று தான். முந்தைய காலத்தில் இருந்து மது என்பது இருந்து வருகிறது. காலத்திற்கு ஏற்றார் போல் நாம் பெயரை மாற்றிக் கொண்டு உபயோகித்து வருகிறோம். புராண காலங்களில் இயேசு கிறிஸ்து திராட்சை ரசத்தை குடித்துள்ளார். ராஜராஜ சோழன் காலத்தில் சோமபானம் என்பதை குடித்து வந்தார் என்று கூறியிருந்தார்.

இவரின் இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பியது. தமிழ்நாடு கிறிஸ்தவ சபை கூட்டமைப்பு இயேசு கிறிஸ்து குடித்த திராட்சை ரசத்தை மதுவுடன் இணைத்து பேசி விஜய் ஆண்டனி அவமதித்து விட்டார் என்று கண்டனத்தை தெரிவித்து அறிக்கையை வெளியிட்டு இருந்தனர். மேலும் கிறிஸ்தவ சமூகத்தினரின் மனதை புண்படுத்தியதற்காக விஜய் ஆண்டனி பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் அவர் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தனர்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக நடிகர் விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ள அறிக்கையில், அன்பார்ந்த கிறிஸ்தவ கூட்டமைப்பின் உறுப்பினர்களே வணக்கம், நான் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் திராட்சை ரசம் கண்டுபிடித்து 2000 வருடங்கள் ஆகிறது. அப்போதே புழக்கத்தில் இருந்துள்ளது. அப்போது தேவாலயங்களில் பயன்படுத்தப்பட்டது, இயேசு பிரான் அதை பயன்படுத்தி இருக்கிறார் என்று கூறி இருந்தேன். அனால் அதற்கு அடுத்தபடியாக கேட்ட கேள்விகளுக்கு நான் அளித்த பதில்களை இணைத்து தவறாக அர்த்தப்படுத்தி உள்ளார்கள். உங்கள் மனம் புண்பட்டது எனக்கு வேதனை அளிக்கிறது. நீங்கள் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். மக்களுக்காக ரத்தம் சிந்தி உயிர் நீத்த மதங்களுக்கு அப்பாற்பட்ட இயேசு கிறிஸ்துவை தவறாக சித்தரிக்க எனக்கு கனவிலும் வராது. என்றும் அன்புடன் விஜய் ஆண்டனி என்று தன்னுடைய அறிக்கையில் வெளியிட்டிருந்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...